‘ஜனநாயகன்’ தள்ளிப் போனதால் ரீ ரிலீசாகும் விஜய் படங்கள்..; குவியும் கார்த்தி – ஜீவா – ரிச்சர்ட் படங்கள்

‘ஜனநாயகன்’ தள்ளிப் போனதால் ரீ ரிலீசாகும் விஜய் படங்கள்..; குவியும் கார்த்தி – ஜீவா – ரிச்சர்ட் படங்கள்

 

‘ஜனநாயகன்’ தள்ளிப் போனதால் ரீ ரிலீசாகும் விஜய் படங்கள்..; குவியும் கார்த்தி – ஜீவா – ரிச்சர்ட் படங்கள்

 

2026 பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய படங்கள் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.. ஜனநாயகன் 9ம் தேதியும் பராசக்தி 10ம் தேதி வெளியாக இருந்தன.

ஆனால் ஜனநாயகன்படத்தின் சென்சார் பிரச்சனையால் இதுவரை படம் வெளியாகவில்லை.. மேலும் இந்த படத்தின் கோர்ட் தீர்ப்பு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பராசக்தி படம் ஜனவரி 10ஆம் தேதி சனிக்கிழமை வெளியானது.. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதால் படக் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ படம் தள்ளிப் போனதால் விஜய்யின் இரண்டு படங்கள் ரீரிலிஸ் ஆக உள்ளது.. மெர்சல் (இன்று ஜனவரி 10ம் தேதியும் மற்றும் தெறி ( ஜனவரி 15) ஆகிய படங்கள் ரீ – ரீலீஸ் ஆகிறது.

இவை இல்லாமல் நிறைய திரையரங்குகள் காலியாக இருப்பதாலும் பொங்கல் பண்டிகைக்கு பத்து நாட்கள் விடுமுறை இருப்பதாலும் மற்ற படங்களும் ரீலீஸ் என அறிவித்து வருகின்றனர்.

ஞானவேல் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படம் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில் நீதிமன்ற தடையால் அப்போது வெளியாகவில்லை.

தற்போது பிரச்சனைகள் தீர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படமும் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. நித்திஷ் சகாதேவ் என்பவர் இந்த படத்த இயக்க கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரித்துள்ளனர்.. அரசியல் காமெடி படமாக இந்த படம் உருவாகியுள்ளது.. இந்த படத்தை உத்ரா ப்ரொடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது.

இத்துடன் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.. 14 ஆம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட ரத்த சரித்திரம் என்ற மையக்கருவை இந்த படம் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்துள்ளார்..
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க முக்கிய வேடத்தில் ரக்ஷனா நட்டி நடராஜ் வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. இந்த படம் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என டிரைலரில் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்..

 

 

TTT Vaa Vaathiyar and Draupathi 2 movies set to release for Pongal 2026

 

 

 

Related articles