சூர்யா 45 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா.? ஏன் தெரியுமா?

சூர்யா 45 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா.? ஏன் தெரியுமா?
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இதன் பின்னர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். கோவையில் உள்ள ஆனைமலை மாசானியம்மன் கோவிலில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக இனைந்துள்ளார் த்ரிஷா.
இந்நிலையில் த்ரிஷா திரை உலகில் நடிக்க வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அவர் சூர்யா 45 வது படத்தில் நடிப்பதை அப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதோடு படப்பிடிப்பு தளத்தில் அவர் த்ரிஷா 22 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினர் திரிஷா..
Trisha 22 years celebration at Suriya 45 spot