டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் 4.5/5.. ஒரு ட்ரிப் அடிச்சி கதைப்போம் வாங்கோ.!

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் 4.5/5.. ஒரு ட்ரிப் அடிச்சி கதைப்போம் வாங்கோ.!

 

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் 4.5/5.. ஒரு ட்ரிப் அடிச்சி கதைப்போம் வாங்கோ.!

 

ஸ்டோரி…

இலங்கையில் வாழ வழியின்றி கள்ளத்தோணி மூலம் இந்தியாவில் ராமேஸ்வரம் வந்தடைகின்றனர் சசிகுமார் சிம்ரன் மற்றும் அவரது இரு மகன்கள்.. (பெரியவன் மிதுன்.. சின்னவன் கமலேஷ் ஜெகன்) இவர்களுக்கு உதவ இந்தியாவில் ரெடியாக இருக்கிறார் சிம்ரனின் அண்ணன் யோகி பாபு..

நள்ளிரவில் இவர்கள் இந்திய கடற்கரையோரம் வந்து இறங்கும்போது போலீஸ் ரமேஷ் திலக் டீம் இவர்களை பார்த்து விடுகின்றனர்.

இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் இவர்களின் நல்ல குணத்தை அறிந்து எப்படியாவது பிழைத்து போங்கள் என்று விசாரிக்காமல் விட்டு விடுகின்றார்.

அங்கிருந்து சென்னை வரும் சசி சிம்ரன் குடும்பத்தினர் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர்.. தாங்கள் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து கேரளாவை சேர்ந்தவர்கள் என்று சொல்லி வசித்து வருகின்றனர்.

அப்போது ராமேஸ்வரத்தில் குண்டு வெடிக்க அந்த திட்டம் சசியின் சதியாக இருக்குமோ காவல்துறை சந்தேகிக்கிறது.

அதன்படி இவர்களை தேடி அலைகின்றனர்.. இவர்களை கண்டுபிடித்தார்களா.? குண்டு வைத்தவர் யார்.? அவர்களுக்கும் சசிகுமாருக்கும் தொடர்பு இருக்கிறதா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அயோத்தி & டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் சசிக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.. நல்லவன் என்பதை விட ரொம்ப நல்லவன் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி போகிறார்.. சபாஷ்..

படத்தின் இயக்குனரே ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.. அவரது எமோஷன் சீன் நிச்சயம் நம்மை மீறி கண்ணீரை வரவழைக்கும்..

இதற்கு முன்பு சேலை கட்டிய சிம்ரனை இப்படி பார்த்து இருக்கிறீர்களா? என்றால் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தான்.. நடிப்பில் மட்டுமல்ல சிரிப்புக்கும் சிக்ஸர் அடித்திருக்கிறார் சிம்ரன்..

பக்கத்து வீட்டு தம்பதிகளாக ஸ்ரீஜா & குமரவேல்.. இருவரும் நடிப்பில் போட்டோ போட்டி.. யாரும் தெரியாத ஊரில் ஸ்ரீஜா போல பக்கத்து வீட்டு பெண்மணி இருந்தால் எல்லோரும் ஹேப்பி அண்ணாச்சி..

ஸ்ரீஜா நினைவஞ்சலி கூட்டத்தில் நாமும் கண் கலங்கி கொண்டிருக்கிருக்கையில் அப்பா (சசி) உங்க போட்டோவை அங்க வச்சி இருக்கலாம் என்று கமலேஷ் சொல்லும் போது கண்ணீரை மீறி சிரிப்பொலி அரங்கில் அதிரும்.. கலக்கிட்டடா தம்பி கமலேஷ்..

ஹாப்பி ஓணம்.. பொய் நாய்க்குட்டி அறிமுகப்படுத்துவது.. என்ட பேரு ஜோசப் குருவில்லா.. என படம் முழுக்க கமலேஷ் கலகலப்புக்கு கேரண்டி..

தனி காமெடி ட்ராக் இல்லாமல் படத்தோடு ஒன்றி நம்மையும் ஒன்றை வைத்துள்ளார் யோகி பாபு..

போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்ஸ்.. பக்கத்து வீட்டுக்காரர் எம் எஸ் பாஸ்கர்.. ஸ்கூல் டீச்சர்.. பக்ஸ் மனைவி & மகள் என அனைவரும் சிக்ஸர் அடித்து இருக்கின்றனர்..

மூத்த மகனாக நடித்த மிதுனும் கலக்கல்.. இவன் என்னடா எப்பவும் கோபமா இருக்கானே என்று நினைக்கையில் எமோஷனலாக பேசி நடிப்பில் பின்னிட்டார்..

மீதுனின் எக்ஸ் லவ்வர் & மம்பட்டியான் சாங் படத்தில் பட்டைய கிளப்பும் ரகம்.. பக்ஸ் மகள் யோகலட்சுமி அவரது காதல் கதைகளும் க்யூட்டானவை.. அதிலும் அந்த 18 வயசு மெச்சூரிட்டி வேற லெவல்..

நார்த் இந்தியன் போலீஸ் & அவரது விசாரணையும் கூட ரசிக்க வைக்கிறது

டெக்னீசியன்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷான் ரோல்டன் பின்னணி இசையில் குடும்ப உணர்வை கலந்து நம்மையும் குடும்பத்துடன் இணைத்து விட்டார்.. பாடலும் & பாடல் வரிகளும் உணர்வுப்பூர்வமான கவிதை..

ராமேஸ்வரம் மட்டுமல்ல சென்னை கேசவ காலனியையும் அழகாக காட்டி ஒவ்வொரு குடும்பத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.. அடடா சென்னையில் இப்படி ஒரு ஏரியா இருக்கா? நமக்கு அங்கு வீடு கிடைக்குமா? என தன் ஒளிப்பதிவில் ஏங்க வைத்து விட்டார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத்..

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் தன் எடிட்டிங் பணியில் பக்கா..

அகதிகளாக வருபவருக்கு போலியான எலக்சன் ஐடி கார்டு மற்றும் ஆதார் கார்டு என்பது நம்பும்படியாக இல்லை.. ஆனால் நாட்டிலும் அப்படி சில நிகழ்வு நடப்பது உண்மைதானே..!!?? கடைசியில் குண்டு பிரச்சனை என்ன? போலீஸ் என்ன செய்தனர் என்பதெல்லாம் முடிவில்லாத கதை..

ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் எமோஷன் காமெடி என மாறிமாறி நம்மை ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்து விட்டார் இந்த அறிமுக இயக்குனர்

இதுதான் என் முதல் படம் என்று இயக்குனர்
அபிஷன் சொன்னாலும் நம்மால் நம்ப முடியவில்லை.. உணர்வுபூர்வமான காட்சிகள்.. அழகான வசனங்கள் மூலம் அன்பின் வலிமையை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்…

ஆக இந்த டூரிஸ்ட் ஃபேமிலிக்கு.. நாமும் ஒரு ட்ரிப் அடித்து நிறைய கதைக்கலாம்..

Tourist family movie review