ப்ரோ கபடி லீக் சீசன் XI – தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாக சாகர் ரதி

ப்ரோ கபடி லீக் சீசன் XI – தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாக சாகர் ரதி

 

 

ப்ரோ கபடி லீக் சீசன் XI – தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாக சாகர் ரதி

 

ப்ரோ கபடி லீக் சீசன் XI க்கு தமிழ் தலைவாஸ் அணியின் தலைவராக சாகர் ரதி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்

சென்னை,10 செப்டம்பர் 2024:

விரைவில் தொடங்கவுள்ள ப்ரோ கபடி லீக் சீசனில் விளையாடவுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு சாகர் ரதி கேப்டனாக செயல்படுவார் என செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டார்.

தமிழ் தலைவாஸ் அணியின் தலைவராக சாகர் ரதி 3 வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் ஆற்றல், திறன்கள் என அனைத்தும் ஒருசேர வெளிப்படுத்த தயாராக உள்ளனர்.

ப்ரோ கபடியின் 9 வது சீசனில் முதல் முதலாக அணியின் தலைவராக செயல்பட்ட சாகர் ரதி, அணியை வெற்றிகரமாக வழி நடத்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்று அரையிறுதிக்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

சீசன் 10 லிலும் தனது தனி திறமை மூலம் அணியை வழிநடத்தினார். தற்போது சீசன் 11 லிலும் அணியை வழி நடத்தும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்காப்பு விளையாட்டு, வியூகம் வகுத்து களம்காண்பது, அசைக்க முடியாத நம்பிக்கையுடனான ஆட்டம் ஆகியவற்றால் சாகர் ரதி நன்கு அறியப்பட்டவர்.

இதுவே, சாகர் ரதி, மீண்டும் தமிழ் தலைவாஸ் அணியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

தமிழ் தலைவாஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாகர் ரதி கூறுகையில்…

தமிழ் தலைவாஸ் அணி கடந்த 2 சீசன்களாக தனித்திறமையுடன் செயல்பட்டு முன்னணியில் இருந்து வருவதாகவும், அந்த அணிக்கு வது முறையாக தலவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரிய கௌரவமாக இருப்பதாக கூறினார்.

அணியினர் அனைவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பணியாற்றி வருவதாகவும் இந்த புரிதல் ஆட்டத்தின்போது எதிரொலிக்கும் என்றார்.

அணி குறித்து, தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளர் சேரநாதன் கூறுகையில்…

ப்ரோ கபடி . சீசன் 11 ல் விளையாடவுள்ள நிலையில் எங்கள் அணியின் கவனம் தெளிவாக உள்ளதாக தெரிவித்தார்.

ஆட்டத்தில் வெளிப்படுத்தவுள்ள திறனை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் கடந்த கால ஆட்டங்களில் கற்றுக்கொண்ட திறனை ஒருங்கிணைத்து வெளிகொணர தேவையான அனைத்து வியூகங்களையும் வகுத்திருக்கதாக கூறினார்.

இந்த சீசனில் விளையாடும் எங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் உறுதியான மனநிலையுடன் விளையாடுவதற்கு அனைத்துவிதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இது ஆட்டத்தின் போது முழு வீச்சில் வெளியாகும் என்றார்.

இது குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் உதயகுமார் கூறுகையில்….

அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுவருவதுடன், அணியின் வெற்றிக்காக கடைசி நிமிடம் வரையில் போராட வேண்டும் என்ற மனநிலையை பெற்றிருப்பதாக கூறினார். வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு ரெய்டுகளையும் தன்ம்பிக்கையுடன் எதிர்கொள்ள தேவையான அனைத்துவிதமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் பலத்தையும், ஒற்றுமையையும் ஒவ்வொரு வீரர்களும் வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழ் தலைவாஸ் அணியின் விவரம்:

ரைடர்ஸ்:

விஷால் சாஹல், ராம்குமார் மாயாண்டி, நிதின் சிங், நரேந்தர் ,
தீரஜ் பெயில்மேரா, சச்சின் தன்வார், சௌரப் பகாரே

*டிபென்டர்கள்* :

எம்.அபிஷேக்

ஹிமான்ஷு

சாகர், ஆஷிஷ், மோகித், சாஹில் குலியா, அனுஜ் கவாடே, ரோனக் ,
நிதேஷ் குமார் ,
அமீர்ஹோசேன் பஸ்தாமி

ஆல் ரவுன்டர்: மொயின் சஃபாகி

Tamil Thalaivas Kabadi League Season XI Captain Sagarrathi