‘ரெட்ரோ’ டைட்டில் டீஸர் : சூர்யா ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் சுப்புராஜ்

‘ரெட்ரோ’ டைட்டில் டீஸர் : சூர்யா ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் சுப்புராஜ்

 

‘ரெட்ரோ’ டைட்டில் டீஸர் : சூர்யா ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் சுப்புராஜ்

 

சூர்யா நடிப்பில் 44வது படமாக உருவாகி வரும் படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்போது ரெட்ரோ RETRO என்று தலைப்பிட்டு டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு ஸ்ரேயா சரண் சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு 2025 கோடை காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriyas Retro title teaser goes viral