‘கூலி’ இசை விழா அல்ல.. அதுக்கும் மேல.. ரஜினி ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸின் சர்ப்ரைஸ்

‘கூலி’ இசை விழா அல்ல.. அதுக்கும் மேல.. ரஜினி ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸின் சர்ப்ரைஸ்
ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் – லோகேஷ் கனகராஜ் – அனிருத் ஆகியோர் நால்வர் கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘கூலி’.
இந்த பிரம்மாண்ட படைப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், அமீர்கான், பூஜா ஹெக்டே, சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், உபேந்திரா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பிரம்மாண்ட கூட்டணியாக கூலி படம் உருவாகியுள்ளதால் இந்த படம் இந்தியளவில் ₹1000 கோடியை வசூலை அள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படம் அடுத்த மாதம் ஆகஸ்டு 14ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி சனிக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது..
இது தொடர்பான வீடியோ பதிவில்…
‘கூலி’ இது இசை வெளியீட்டு விழா அல்ல அதற்கு மேலே.. என ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Sun pictures giving surprise for Rajini fans