6-60 வரை.; அமரனை விட பராசக்தி-க்கு கமலின் பெரும் பாராட்டு..; ரஜினிக்கு என்றும் நன்றி.. – சிவகார்த்திகேயன்
6-60 வரை.; அமரனை விட பராசக்தி-க்கு கமலின் பெரும் பாராட்டு..; ரஜினிக்கு என்றும் நன்றி.. – சிவகார்த்திகேயன்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் ஸ்ரீலீலா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘பராசக்தி’.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது..
இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.. மேலும் உலக அளவில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் 51 கோடியை கடந்துள்ளதாக அறிவித்துள்ளனர்..

இந்த நிலையில் இன்று ஜனவரி 13ஆம் தேதி படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்த விழாவில் சுதா பேசும் போது..
“ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது எனக்கும் சிவாவுக்கும் சில நாட்கள் செட்டாகவில்லை.. ஒருநாள் இரவு அவரை சந்தித்து மூன்று மணி நேரம் பேசினேன் அதற்குப் பிறகு எந்த பிரச்சினையும் இல்லை.. சிவாவின் ஒத்துழைப்பு மறக்க முடியாது..
ஸ்ரீ லீலாவை மற்ற படங்களில் கிளாமராக காட்டியிருப்பார்கள்.. ஆனால் இந்த படத்தில் அவர் நடிப்பு திறமையை நான் கொண்டு வந்தேன். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது..” என்று பேசினார் சுதா.
ஸ்ரீலீலா பேசுகையில்…
பராசக்தி படத்தில் நடித்தது திருப்தி. என் நடனம், பாடலுக்கு பாராட்டுகள் வருவது பழகிவிட்டது. பராசக்தி மூலமாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச் சரியான அறிமுக படம்.
இவ்வாறு அவர் பேசினார்..

சிவகார்த்திகேயன் பேசியதாவது….
பராசக்தி படத்தை பார்த்து விட்டு குட்டி பையன் ஒருவன் தீ பரவட்டும், தமிழ் வாழ்க என்று வீடியோ அனுப்பி இருந்தான்… அதுபோல இந்தி எதிர்ப்பு காலத்தில் இருந்த ஒரு பெரியவர் எமோஷனலாக பேசியிருந்தார்.. அந்த அளவுக்கு மக்களிடம் பராசக்தி படம் சென்று அடைந்துள்ளது.
டாக்டர் படத்தில் நடித்த போதிலிருந்து நான் மானிட்டரை பார்ப்பதை தவிர்த்து விட்டேன்… ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பு சந்தேகம் இருந்தால் கேட்டுக் கொள்ளலாம்.. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதன் பிறகு நாம் மானிட்டரை பார்ப்பது சரியல்ல.. இயக்குனருக்கு தெரியும் எது வேண்டும் எது வேண்டாம் என்று.. எனவே நாம் மானிட்டர் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
அதுபோல படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.. முக்கியமாக தினம் தினம் படம் பார்க்கும் பத்திரிகையாளர்கள் என் நடிப்பை நிறைய பாராட்டி இருந்தார்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி..
ராதிகா பாராட்டி இருந்தார்.. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய நடிப்பின் முதிர்ச்சி இருப்பதாக தெரிவித்தார்.. அதற்கு நன்றி.. படம் வெளிவாவதற்கு முன்பு கமல் படத்தைப் பார்த்து பாராட்டி இருந்தார் அமரன் படத்திற்கு கூட அவர் மூன்று நிமிடம் தான் பேசினார்… ஆனால் பராசக்தி படத்திற்கு ஐந்து நிமிடம் பாராட்டி பேசி இருந்தார்…
அதுபோல என் தலைவர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து பாராட்டினார்.. இது படம் தைரியமான போல்ட் மூவி.. இடைவேளைக்குப் பிறகு சூப்பர்.. செம பர்ஃபார்மன்ஸ்’.. டாக்டர் படம் முதல் அவர் ஒவ்வொரு படத்தையும் பாராட்டி வருவது எனக்கு மகிழ்ச்சி. அவருக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்.. இன்றும் நன்றி.. என்றும் நன்றி.. ” என்று பேசினார் சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan speech about Kamal and Rajini appreciation for Parasakthi
கூடுதல் தகவல்…
பராசக்தி படத்தில் சொல்லப்படாத கருத்துக்கள் உள்ளது.. ஹிந்தி திணிப்பை காங்கிரஸ் கொண்டு வந்ததாக காட்சிகள் உள்ளது.. காங்கிரஸுக்கு எதிராக பல கருத்துக்கள் உள்ளது.. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..
மேலும் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

