சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி – அதர்வா – ஜிவி பிரகாஷ் இணைந்த மெகா கூட்டணி

சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி – அதர்வா – ஜிவி பிரகாஷ் இணைந்த மெகா கூட்டணி
சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார்.
அதில் ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்க உள்ளனர்.. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸ்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார் ஸ்ரீ லீலா என்பது குறிப்பிடத்தக்கது.
SK25 படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசை அமைக்கவிருப்பதாகவும் படத்தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் தயாரிப்பு நிறுவனமும் ‘டான் பிக்சர்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான அறிவிப்பில்…
“எங்களது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் Production No.2-வாக உருவாகும் திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்த் திரையுலகில் தன் நடிப்பால் மக்கள் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அவர்களின் 25வது படமாக “டான் பிக்சர்ஸின் Production No.2” அமைவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புகளோடு உருவாகும் இந்தத் திரைப்படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார்.
எப்போதுமே தனித்துவமிக்க கதைகளை தேர்வு செய்திடும் ஜெயம் ரவி அவர்களும் எங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அதர்வா, செல்வி, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் அவர்களும், இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்களும் பங்களிக்கிறார்கள். குறிப்பாக, திரு. ஜி.வி.பி அவர்களுக்கு இசையமைப்பாளராக இது 100வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு.
உங்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் வகையில் #SK25 நிச்சயம் அமையும் என உறுதியளிக்கிறேன்” என்று தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பதிவிட்டுள்ளார்.
Sivakarthikeyan Jayam Ravi Atharva joins for Sudha Kongara