அன்று ‘துப்பறிவாளன் 2’ மிஷ்கின் விலகல்.. இன்று ‘மகுடம்’ ரவி அரசு விலகல்..; 2 படம் இயக்கும் விஷால்

அன்று ‘துப்பறிவாளன் 2’ மிஷ்கின் விலகல்.. இன்று ‘மகுடம்’ ரவி அரசு விலகல்..; 2 படம் இயக்கும் விஷால்

அன்று ‘துப்பறிவாளன் 2’ மிஷ்கின் விலகல்.. இன்று ‘மகுடம்’ ரவி அரசு விலகல்..; 2 படம் இயக்கும் விஷால்

 

 

மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் படத்தில் நாயகனாக நடித்திருந்தார் விஷால்.. இதில் நடிகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.. இதனை மிஷ்கின் சில தினங்கள் இயக்கிக் கொண்டிருந்தார்.. ஆனால் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகிக் கொண்டார்..

எனவே இந்த படத்தை விஷாலை இயக்குவதாக அறிவித்திருந்தார்.. அதன்படி ‘துப்பறிவாளன் 2’ பட சூட்டிங் நடைபெற்றது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ‘ஈட்டி’ பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் விஷால் நடித்து வந்தார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.. இதில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார்..

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ரவி அரசு தற்போது விலகி இருக்கிறார்.. நாயகனுக்கும் இயக்குநருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து ரவி அரசு விலகியதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் மகுடம் திரைப்படத்தையும் நடிகர் விஷால் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.. ஏற்கனவே துப்பறிவாளன் 2.. தற்போது மகுடம் ஆகிய இரண்டு படங்களையும் விஷால் இயக்க உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Ravi Arasu Quit Magudam shoot.. Vishal will direct movie