சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு அம்பேத்கர்..; மாரி செல்வராஜ் இப்ப வேற மாறி.. – ரஞ்சித்

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு அம்பேத்கர்..; மாரி செல்வராஜ் இப்ப வேற மாறி.. – ரஞ்சித்

 

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு அம்பேத்கர்..; மாரி செல்வராஜ் இப்ப வேற மாறி.. – ரஞ்சித்

 

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன் காளமாடன் ‘. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இவர்களுடன் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் பேசினார்.

 

“இயக்குனர் ராம் தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பிவைத்தார்.

நான் எடுத்த மெட்ராஸ் படம் மீது மாரி செல்வராஜூக்கு விமர்சனம் உள்ளது என்று சொல்லி தான் ராம் என்னிடம் அனுப்பினார்.

அப்படி தான் எனக்கும் மாரி செல்வராஜுடன் முதல் அறிமுகம் கிடைத்தது..

தனக்கு இருக்கும் கோபத்தை ஒரு கலையாக மாற்றும் மாரியை பார்த்து நான் பலமுறை வியந்திருக்கிறேன்..

மாரி முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை விட ஒரு இயக்குநராக பைசன் படத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை மாரி செல்வராஜ் அடைந்துள்ளார்” என்று தெரிவித்தார் ரஞ்சித்..

மேலும்..

இந்திய சமூகத்தின் எல்லாப் பிரச்னைக்கும் தீர்வாக நான் கருதுவது அம்பேத்கரைதான். அம்பேத்கர் ஒருபோதும் நம் இந்திய மக்களை கைவிட்டதில்லை.

மக்கள் அவருக்குத் கொடுத்த வெறுப்பை, வெறுப்பாக கொடுக்காமல் மக்களை நெறிப்படுத்தும் வாழ்வியல் முறைகளாக மாற்றி கொடுத்தார்.

அம்பேத்கர் வழிகாட்டுதலின் பேரிலேயே இயங்குகிறேன்.. அதில் பெருமிதம் கொள்கிறேன். ஜெய்பீம் ” என்றார் ரஞ்சித்..

 

 

இந்தப் படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ள அமீர் பேசும் போது..

நா”னும் விக்ரமும் 1999 முதல் நல்ல நண்பர்கள்.. ஆனால் இது யாருக்கும் பெரிதாக வெளியே தெரியாது.. சேது படத்தின் முதலில் எங்களுக்கு நெருக்கம் ஏற்பட்டது.. அப்போது துருவுக்கு ஒரு இரண்டு  வயது இருக்கும்.. அப்போதும் ரொம்ப சுட்டியாக இருப்பார் என்னை பிடிவாதமாக அழைத்து சாக்லேட் வாங்கி தர சொல்வார்.. விக்ரமுக்கு சேது படம் எப்படி அமைந்ததோ அதுபோல துருவுக்கு bison அமையும் என்று பேசினார் அமீர்..

Ranjith speech about Mari Selvaraj at Bison Audio launch