ரசிகர் மன்ற மு. தலைவர் சத்யநாராயணா சிகிச்சை செலவை ஏற்ற ரஜினி

ரசிகர் மன்ற மு. தலைவர் சத்யநாராயணா சிகிச்சை செலவை ஏற்ற ரஜினி
தமிழ் திரையலைகில் கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினியின் ஆரம்ப காலங்களில் ரசிகர்கள் பல மன்றங்களை திறந்தனர்.. அப்போது ரசிகர் மன்றங்களுக்கு தலைவராக சத்திய நாராயணா நியமிக்கப்பட்டார்..
அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து தன்னுடைய உடல்நிலை காரணமாக சத்தி நாராயணா பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.. ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்து சத்திய நாராயணாவை சென்னையில் வந்து சிகிச்சையை மேற்கொள்ள ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.. ஆனால் அவரால் தற்போது வர முடியாது சூழ்நிலையில் கும்பகோணத்தில் சிகிச்சையை செய்வதாக தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
சத்திய நாராயணனின் ஒட்டு மொத்த சிகிச்சை செலவு ஏற்றுக்கொண்டு அந்த மருத்துவமனை கட்டணங்களை செலுத்தியுள்ளார் ரஜினிகாந்த் என தகவல்கள் வந்துள்ளன..
Rajini paid hospital bill for his fan Sathya Narayana