பராசக்தி விமர்சனம் 4.5/5.. மகுடம் சூட்டிய மக்கள் சக்தி – Powerful Script with Power House Performers
பராசக்தி விமர்சனம் 4.5/5.. மகுடம் சூட்டிய மக்கள் சக்தி – Powerful Script with Power House Performers
ஸ்டோரி…
1959இல் கதை தொடங்குகிறது.. அப்போது கல்லூரியில் ஹிந்தியை எதிர்க்கும் மாணவராக புரட்சியாளராக சிவகார்த்திகேயன் வருகிறார்.. ஹிந்தியை எதிர்க்கும் தமிழர்களை சுட்டுத் தள்ளும் ஆபீஸராக ரவி மோகன் வருகிறார்..
ஆறு வருடங்களுக்குப் பிறகு ரயில் இன்ஜினில் கறி அள்ளிப் போடும் நபராக பணிபுரிந்து வருகிறார் சிவா.. அப்போது ஹிந்தி கற்றால் தான் வட இந்தியாவில் வேலை கிடைக்கும்.. பணியில் புரொமோஷன் கிடைக்கும் என்பதால் நாயகி ஸ்ரீலிலாவிடம் ஹிந்தி கற்கிறார்..

அதேசமயம் 1965 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் முக்கியமாக தமிழகம் முழுவதும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது.. இதில் சிவகார்த்திகேயன் தம்பி அதர்வா ஹிந்தியை எதிர்க்கும் புரட்சி மாணவராக வருகிறார்..
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கும் ரவி மோகனுக்கும் இந்தப் போராட்டம் தனிப்பட்ட மோதலாக வெடிக்கிறது.. இறுதியில் என்ன ஆனது.? ஹிந்தி தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததா ? கேரளா ஆந்திரா மாநிலங்களின் நிலை என்ன.? பிரதமர் முதல் முதலமைச்சர் வரை என்ன செய்தனர்.? மாணவர் சக்தி மக்கள் சக்தி என்ன ஆனது.? தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை திராவிட கட்சிகள் எப்படி வீழ்த்தியது என்பதையெல்லாம் உணர்வுப்பூர்வாக மொழி உணர்வோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா..

கேரக்டர்ஸ்…
நடிகர்களுக்கு 25 வது படம் – சூர்யாவுக்கு சிங்கம் 25 ஆவது படமாக அமைந்தது அதுபோல தற்போது சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி.. மகுடம் சூட்டும் மக்கள் சக்தியாக சக்தியாக அமைந்திருக்கிறது..
அமரன் மற்றும் மதராஸி ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து பராசக்தி-யும் சிவகார்த்திகேயனின் தொடர் வெற்றி பட்டியலில் இணையும்.. தண்டச்சோறு வேலையில்லாத பையன் என தன் ஆரம்பகால சினிமாவை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது நடிப்பிலும் கதை தேர்விலும் மெச்சூரிட்டியாக வளர்ந்து நிற்கிறார்..
சிவகார்த்திகேயன் அதர்வா இருவரின் உடல் மொழி என அனைத்தும் அந்த கால நடிகர்களை நினைவுபடுத்துகிறது.. முக்கியமாக ஜெமினி கணேசன் உடல் மொழியை அதர்வாவிடம் காண முடிகிறது..

தமிழ் சினிமாவில் இதை விட ஒரு சிறப்பான அறிமுகம் நடிகை ஸ்ரீலங்காவுக்கு கிடைக்காது.. தெலுங்கு தமிழ் ஹிந்தி என அவர் பேசும் அனைத்து மொழிகளும் அவரை போலவே கொள்ளைஅழகு..
இதில் சில பெண்கள் நடித்திருந்தாலும் ஸ்ரீலீலாவின் தோற்றம் யாருடனும் ஒத்துப் போகவில்லை.. ஒருவேளை அவர் எம் பி யின் மகள் என்பதால் அலங்காரம் மிகையானதோ..

தன் முதல் படத்தில் நாயகனாக நடித்த ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக அதுவும் கதைக்கு ஏற்ப வில்லனாக தன்னை மெருகேற்றி இருப்பது அவரின் நடிப்புக்கு சான்று.. தனி ஒருவனில் ஸ்டைலிஷ் வில்லன் அரவிந்தசாமி.. பராசக்தியில் செம ஸ்மார்ட் வில்லன் ரவி மோகன்..
தமிழ்நாட்டு முதலமைச்சராக நடித்த நபர்.. கருணாநிதியாக நடித்த குரு சோமசுந்தரம் அண்ணாவாக நடித்த சேத்தன்.. பிரதமர் இந்திரா காந்தியாக நடித்த பெண்மணி உள்ளிட்டோரும் தங்களுடைய பாத்திரங்களில் ஜொலிக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…
அசுரன் அமரன் வரிசையில் மீண்டும் ஒரு இசை சாம்ராஜ்யத்தை நிகழ்த்தி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.. இவரது இசையில்… ‘ரத்தின மாலா.. நமக்கான காலம்..’ உள்ளிட்ட பாடல்கள் மனதை வருடுகிறது.. இசை அமைப்பில் 100 படங்களைத் தொட்ட ஜிவி பிரகாஷுக்கு இந்த பராசக்தி மாபெரும் சக்தியாக வெற்றியை பெற்று தரும்..
பாடலுக்கு ஏற்ப நடிகர்களின் தேர்வும் நடனம் அமைப்பும் அதற்கு ஏற்ப ஒளிப்பதிவும் என அனைத்தும் சிறப்பு..
நாம் பிறப்பதற்கு முன்பு 1960-களில் இருந்த டெல்லியை மதுரையை மெட்ராஸ் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்..
கலை இயக்குனர் பணியை படம் முழுவதும் பாராட்டலாம்.. ஒவ்வொரு கலைப் பொருள்களும்.. நடிகர்களின் ஆடைகள், சிகை அலங்காரம் முதல் செருப்பு வரை ஒவ்வொன்றையும் கண்காணித்து கவனித்து வடிவமைத்துள்ளனர்..

சென்சார் சிக்கல் காரணமாக சில காட்சிகளை மட்டும் சித்தரிக்கப்பட்டவையாக சித்தரித்துள்ளனர்.. அதே சமயம் எந்த மொழியும் கற்க தமிழர்கள் தயாராகி வரும் சூழ்நிலையில் ஹிந்தி எதிர்ப்பு தேவையா என்ற கேள்வி எழலாம்..
ஹிந்தியை கற்கும் முதலில் மறுக்கும் சிவகார்த்திகேயன் கேரக்டர் ஒரு கட்டத்தில் ஹிந்திய கற்பதாகவும் காட்டி இருக்கின்றனர்.. முக்கியமாக வங்கி மற்றும் தபால் நிலையங்களில் ஹிந்தி மட்டுமே கூடாது.. மாநில மொழியும் மொழியும் வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்திருப்பது சிறப்பு.
தன் பிரச்சனையை ஒரு தமிழன் பிரதமரிடம் ஹிந்தி மொழியில் சொல்வதாக சில காட்சிகள் வைத்திருப்பதால் ஹிந்தியை கற்க விரும்புவர்களின் மன உணர்வையும் சொல்வதாக அமைந்துள்ளது..

மாணவர் புரட்சி.. அரசியல்வாதிகளின் அராஜக போக்கு.. அதிகார வர்க்கம்.. தாய்மொழி உணர்வு.. ஆகியவற்றை நேர்க்கோட்டில் இணைத்து உயிரூட்டிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா..
எந்த ஒரு சமரசம் செய்து கொள்ளாமல் படத்தின் நேர்த்திக்கு பிரம்மாண்டமான படைப்பை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்..
படத்தில் சிறப்பு தோற்றத்தில் தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பாஸில் ஜோசப், கன்னட நடிகர் உள்ளிட்டு வரும் சிறப்பு சேர்த்து இருக்கின்றனர்..
Parasakthi movie review

