பரமசிவன் பாத்திமா விமர்சனம்.. சாதிய ஆட்டம் சதியாட்டம்..

பரமசிவன் பாத்திமா விமர்சனம்.. சாதிய ஆட்டம் சதியாட்டம்..
ஸ்டோரி…
ஒரு கிராமத்தில் திருமண நடக்கவிருக்கும் நேரங்களில் மணமக்களைக் கடத்தி அவர்களை விமல் – சாயாதேவி & டீம் கொல்கின்றனர்.. இப்படியாக அடுத்தடுத்து சம்பவங்கள் தொடர்கிறது.. இதனால் அந்த ஊரில் எவருமே திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கிறது.
இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் விசாரிக்கிறார்.. அவருக்கு மேலும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கிறது.. விமல் சாயாதேவி இருவரும் யார்.? அவர்கள் இரவு நேரங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மணமக்களை கொல்வதன் காரணம் என்ன? என்பதற்கு விடை அளிக்கிறது மீதிப்படம்..
கேரக்டர்ஸ்…
ஹீரோ – விமல்
ஹீரோயின் – சாயாதேவி
சர்ச் ஃபாதர் – M.S.பாஸ்கர்
இன்ஸ்பெக்டர் – இசக்கி கார்வண்ணன்
வில்லன் – M.சுகுமார்
துபாய் ராஜா – கூல்சுரேஷ்
சாமியார் – அருள்தாஸ்
ஹீரோ அம்மா – ஸ்ரீரஞ்சனி
ஹீரோயின் அப்பா – மனோஜ்குமார்
ஹீரோயின் அம்மா – ஆதிரா
ஹீரோயின் தோழி – சேஷ்விதா
ஹீரோ நண்பர் – V.R.விமல்ராஜ்
ஹீரோ நண்பர் – மகேந்திரன்
கான்ஸ்டபிள் – காதல் சுகுமார்
கான்ஸ்டபிள் – ஆறு பாலா
குடிகாரன் – வீரசமர்
வில்லன் நண்பர் – களவாணி கலை
நடிகர் விமலுக்கு இது வித்தியாசமான கதைதான்.. சாதிக்கு எதிரான ஒரு படத்தில் பேயாக மாறி சதியாட்டம் ஆடி இருக்கிறார்.. அவருக்கு உறுதுணையாக இருந்து சாயா தேவியும் விமலுடன் சாய்ந்திருக்கிறார்.. காதல் காட்சிகளை விட பேய் காட்சிளே அதிகம்..
வில்லன் சுகுமார் வில்லத்தனத்தில் சூடாகவே இருக்கிறார்.. சர்ச் பாதராக எம் எஸ் பாஸ்கர்.. ஒரு சில நேரங்களில் வழக்கு மொழியை அவர் சிறப்பாக கையாண்டு இருந்தாலும் சர்ச் பாதர் பேசும் தோரணை தான் யோசிக்க வைக்கிறது..
துபாய் ராஜாவாக காமெடியில் வில்லத்தனம் கலந்து கொடுத்திருக்கிறார் நடிகர் கூல் சுரேஷ்..
டெக்னீசியன்ஸ்…
Production : Lakshmi Creations
Director & Producer : Esakki Karvannan
Music : Deepan Chakravarthy
DOP : M.Sukumar
Art Director : Veerasamar
Editor : Buvan
கலை இயக்குனர் வீரசமர் குடிகாரன் கேரக்டரும் நடித்தும் இருக்கிறார்.. படத்துக்கு போய் புவன் செய்ய ஒளிப்பதிவை சுகுமார் செய்து இருக்கிறார் இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி..
தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார் பாடல்களும் பின்னணி இசையும் பாஸ் மார்க் ரகமே..
படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் அவர்கள் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வருகிறார்.. மிரட்டலான தோற்றத்தில் நல்ல நடிப்பை கொடுத்திருந்தாலும் திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம்.. காரணம் இடைவேளை வரை கொலை அதற்கான காரணம் என்ன என்று தேடுதலே நீடிக்கிறது..
வேலை பணம் வசதி வாய்ப்பு என்று தேடும் இந்துக்கள் கிறிஸ்துவ அமைப்புகள் மூலம் மதம் மாறுவதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.. ஆனாலும் ஒரு சிலர் மதம் மாறினாலும் ஹிந்து உணர்வுடன் இருப்பதையும் சாயாதேவி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்..
காதலுக்கு என்றும் மதம் சாதி தடையாக இருக்காது.. காதல் மட்டுமே மதங்களையும் சாதிகளையும் ஒழிக்கும் ஆயுதம்.. ஆனால் அதைக் காட்சிப்படுத்தி விதத்தில் இயக்குனர் தடுமாறி இருக்கிறார்..
Paramasivan Fathima movie review