நிறம் மாறும் உலகில் விமர்சனம்.. 3.5/5.. நிறங்கள் மாறினாலும் அழியாத அன்பு

நிறம் மாறும் உலகில் விமர்சனம்.. 3.5/5.. நிறங்கள் மாறினாலும் அழியாத அன்பு
இயக்குனர் பாரதிராஜா மற்றும் வடிவுக்கரசி ஜோடியாக நடிக்க அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’…
ஸ்டோரி…
விரக்தியில் ரயில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் நாயகி லவ்லின்.. அப்போது டிடிஆர் யோகி பாபு என்ன பிரச்சினை என்று கேட்க அம்மாவிடம் சண்டை என சொல்கிறார்.. அப்போது அவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
முதல் கதையில்.. ஊரை விட்டு ஓடி சென்ற காதல் ஜோடி மும்பையில் படும் இன்னல்களை சொல்கிறார்.
இரண்டாம் கதையில்.. பாரதிராஜா & வடிவுக்கரசி வயதான காலத்தில் தங்கள் ஆண் பிள்ளைகள் இவர்களை பார்த்துக் கொள்ள முடியாமல் தவிர்க்கும் இன்னல்களை சொல்கிறார்..
மூன்றாம் கதையில்.. ஆதிரா இவரது மகன் ரியோ ராஜ்..ஆதிராவின் சிகிச்சைக்கு ₹ 10 லட்சம் தேவைப்படுகிறது.. இதனால் ஊதாரியாக சுற்றித் திரியும் ரியோ ராஜ் என்ன செய்தார் ?
4வது கதையில்…
அனாதையாக ஆட்டோ டிரைவராக இருக்கும் சாண்டி ஒரு கட்டத்தில் காதல் கொள்கிறார். சாண்டிக்கு யாருமில்லை என்பதால் கல்யாணத்திற்கு பிறகும் எந்த உறவு பிரச்சனையும் இருக்காது என நினைத்து காதலுக்கு ஓகே சொல்கிறார் அந்த பெண்.. ஆனால் அந்த சமயத்தில் சாண்டிக்கு துளசி அம்மாவாக கிடைக்கவே அதன் பிறகு என்ன நடந்தது? காதலி விலகி விட்டாரா.?
இந்தக் கதைகள் மூலம் நாயகிக்கு யோகி பாபு என்ன மெசேஜ் சொன்னார் என்பதுதான் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
இதில் பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி, ராஜு மேனன், ரியோராஜ், சாண்டி, ஆடுகளம் நரேன், மைம் கோபி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா, யோகிபாபு & லவ்லின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
அன்பின் வெளிப்பாடாய் அமைந்த கதைகளுக்கு இவர்களுக்கு கேரக்டர்கள் வலு சேர்த்து இருக்கின்றது.. இரண்டாம் கதையும் நான்காம் கதையும் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது..
டெக்னீசியன்ஸ்…
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.. நான்கு கதைகளத்தை அந்த உணர்வுகளுக்கு ஏற்ப படமாக்கி இருப்பது சிறப்பு..
தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார்.. பாடல்கள் கதையுடன் ஒன்றி பயணிப்பது சிறப்பு.. சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார் என்பதற்காகவே ஒரே ஒரு குத்து பாட்டு திணிக்கப்பட்டதாக தெரிகிறது..
அம்மாவை பிடிக்காமல் வாழ்க்கையை வெறுக்கும் (நாயகி லவ்லின்) ஒரு இளம் பெண்ணிற்கு வாழ்க்கையை புரிய வைப்பதற்காகவே யோகி பாபுவின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.. அவரும் தான் சந்தித்த சம்பவங்களையும் தன் வாழ்க்கையில் நடந்ததையும் அந்த பெண்ணிடம் சொல்லி அன்பின் வலிமை உறவுகளின் அவசியத்தை உணர்வுகளைப் பேசும் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ..
4 கதைகள் சொல்லப்பட்டாலும் பாரதிராஜா – வடிவுக்கரசி, ரியோ ஆதிரா & சாண்டி – துளசியின் கதைகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது..
இறுதியாக யோகி பாபு கதைகளை கேட்ட நாயகி லவ்லின் மீண்டும் தன் அம்மாவுடன் அன்பாக இணைவதாக படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.. எனவே நாயகி லவ்லின் நிஜ அம்மாவான நடிகை விஜி சந்திரசேகரனை அந்த கேரக்டருக்கு பயன்படுத்தியிருக்கிறார் டைரக்டர்..
சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது..
Niram Maarum Ulagil movie review