‘விடுதலை 2’ ரிலீஸ்.. அடுத்த சூப்பர் ஸ்டார்.. அடுத்த தளபதி.. சூரி ரியாக்ஷன் இதோ..?!

‘விடுதலை 2’ ரிலீஸ்.. அடுத்த சூப்பர் ஸ்டார்.. அடுத்த தளபதி.. சூரி ரியாக்ஷன் இதோ..?!
இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விடுதலை’.
இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகம் நாளை டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
சூரி கதை நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ளார்..
விடுதலைப் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ‘விடுதலை 2’ படம் இன்று வெளியானது.
விஜய் சேதுபதி ரசிகர்களும் சூரி ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.. சூரி தன் ரசிகர்களுடன் திருச்சியில் விடுதலை 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் சூரி.. அப்போது கூடியிருந்த ரசிகர்கள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார்.. அடுத்த தளபதி என்று கோஷமிட்டு வாழ்த்தினர்.
தம்பிங்களா.. சும்மா இருங்கப்பா.. நான் உங்களில் ஒருத்தனாக இருக்க ஆசைப்படுறேன்.. ” என்று சூரி கலகலப்பாக பேசி பேட்டி அளித்தார்..
Next Superstar Next Thalapathy Soori reaction