ரஜினி – தனுஷ்க்கு பிறகு பிரதீப் ரங்கநாதன்.. – ‘கூலி’ நடிகர் நாகர்ஜுனா பாராட்டு

ரஜினி – தனுஷ்க்கு பிறகு பிரதீப் ரங்கநாதன்.. – ‘கூலி’ நடிகர் நாகர்ஜுனா பாராட்டு

 

 

ரஜினி – தனுஷ்க்கு பிறகு பிரதீப் ரங்கநாதன்.. – ‘கூலி’ நடிகர் நாகர்ஜுனா பாராட்டு

 

திரைக்கு வரவிருக்கும் திரைப்படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பல்வேறு பரிணாமங்களில் ஒவ்வொரு படக்குழுவினரும் பிரமோட் செய்து வருகின்றனர்.

சிலர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் தங்கள் குழுவினரை பங்கேற்க வைப்பது வழக்கம்..

இந்த நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள டியூட் DUDE என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இவர்கள் தெலுங்கில் பிரபலமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.. இந்த நிகழ்ச்சியை ‘கூலி’ படம் வில்லன் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

 

இதில் பிரதீப் & மமிதா பைஜு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பிரதீப் ரங்கநாதனை நாகார்ஜுனா பாராட்டி பேசினார்.

அவர் கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினி சார் சினிமாவுக்கு வந்து விதியை மாற்றினார்.

பிறகு, தனுஷ் ஒரு புதிய பாணியைக் கொண்டு வந்தார். இப்போது, ​​பிரதீப் ரங்கநாதனிடம் அந்தத் தீப்பொறியைப் பார்க்கிறேன்’ என பேசினார்..

இது குறித்து இன்று அக்டோபர் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் RIGHT NEWS RAJA ரைட் நியூஸ் ராஜேஷ் இது குறித்து கேட்டபோது…

நாகர்ஜுனா சார் அப்படி சொன்னது நான் பெருமையாக கருதுகிறேன்.. எனக்கு அது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

Nagarjuna compares Dude Pradeep  to Rajini and Dhanush