மார்க் விமர்சனம்… ACTION BENCH MARK
மார்க் விமர்சனம்… ACTION BENCH MARK
தானு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடித்த ‘மேக்ஸ்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால்.. அந்த பாணியில் அடுத்த பாகம் போல வந்திருக்கும் படம் இந்த மார்க்..
24 மணி நேரத்திற்குள் வில்லன் கும்பலை அடித்து நொறுக்கும் போலீசாக கிச்சா சுதீப் நடித்திருப்பார்.. அதை நீண்ட தாடி.. நீண்ட தலை முடி.. ஆனாலும் போலீஸ்..
ஸ்டோரி…
20 முறை சஸ்பெண்ட்.. 20 முறை டிரான்ஸ்பர்.. 20 என்கவுண்டர் என பயங்கர பில்டப் அறிமுகம் ஆகிறார் கிச்சா சுதீப்..
இவரது உறவினர் குழந்தை ஒன்று ஒரு கும்பலால் கடத்தப்படுகிறது… அதனை தேடும் போதுதான் 18 குழந்தைகள் கடத்தப்பட்ட விவரம் தெரிய வருகிறது..
இதே இரவுக்குள் மற்றொரு சம்பவம் நடக்கிறது.. அதாவது முதல்வரை கொன்றுவிட்டு அவரது மகன் முதல்வராக ஆசைப்படுகிறார்.. நாளைக்குள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.. எனவே அதனை முறியடிக்க திட்டம் போடுகிறார் கிச்சா சுதீப்..
இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒரே இரவுக்குள் முறியடித்துக் காட்டினாரா என்பதுதான் மார்க்..

கேரக்டர்ஸ்…
உலக சினிமாவில் போலீஸ் என்று ஒரு வரைமுறை இருக்கிறது.. அதை முறியடிக்கும் விதமாக நீண்ட தாடி தலைமுடி என போலீசாக வலம் வருகிறார்.. யூனிபார்ம் இல்லாமல் போலீஸ் ஆக கெத்து காட்டி இருக்கிறார்.. சிகரெட் அடித்துக் கொண்டே அனல் பறக்க ஆக்ஷன் அதகளம் செய்து இருக்கிறார் கிச்சா சுதீப்..
வில்லனாக நவீன் சந்திரா.. மிரட்டி இருக்கிறார் இவரது இன்ட்ரோ சீன் படு அலப்பறை.. கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தல்.. இவரது தம்பியாக விக்ராந்த்.. கொஞ்சம் ரொமான்ஸ் கொஞ்சம் ஆக்ஷன் செய்து மரணம் அடைகிறார்..
காமெடிக்காகவே தவணை முறையில் வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் யோகி பாபு.. ஆனா ஒர்க் அவுட் ஆகவில்லை..
சீரியஸ் ரோல் இல்லாமல் சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார் குரு சோமசுந்தரம்..
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், கோபால கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அர்ச்சனா ஆகியோரம் உண்டு என சொல்லிக் கொள்ளலாம்..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு.. பெரும்பாலான காட்சிகளை இரவில் படமாக்கி இருக்கிறார்.. அதற்கு ஏற்ப லைட்டிங் கொடுத்து இருப்பது சிறப்பு..
கலை இயக்குனர் பணி பாராட்டுக்குரியது முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் நீரில் மூழ்கும் குழந்தைகளின் கார் உள்ளிட்டவைகள் பதபதப்பை உண்டாக்குகிறது..
அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.. இசையில் பட்டையக் கிளப்பு இருக்கிறார்.. ஒவ்வொரு காட்சியும் தெறி ரகம்.. அண்ணாத்த யாரு தலைவன் யாரு என்ற பாடல் நிச்சயம் இனி பல அரசியல்வாதிகளின் பிறந்தநாளில் ஒலிக்கும்..
விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கிறார்.. மேக்ஸ் திரைப்படம் பாணியில் உள்ளது.. என்னதான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசாக இருந்தாலும் இப்படியாக செயல்படுவது என்ற கேள்வி எழுகிறது..
என்னதான் நேர்மையாக போலீஸ் ஆக இருந்தாலும் காவல்துறையில் எந்த கட்டுப்பாடும் இல்லையா இவருக்கு எல்லாரும் அடிமைப்பட்டு கிடப்பது போல இருப்பதெல்லாம் ரொம்ப ஓவர்தான்..
இந்த லாஜிக் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு ஆக்சன் மேஜிக் மட்டும் தான் வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த படத்தை நீங்கள் என்ஜாய் செய்து பார்க்கலாம்..
மாஸ் ஹீரோ கதையில் ஆக்சன் மசாலா கலந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்..
Mark movie review

