லெக் பீஸ் விமர்சனம் 3/5… பிரச்சனையில் சிக்கிய நண்பர்கள்

லெக் பீஸ் விமர்சனம் 3/5… பிரச்சனையில் சிக்கிய நண்பர்கள்
பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஸ்ரீநாத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. 4 நண்பர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார்.
ஸ்டோரி…
கிளி ஜோதிடம் பார்ப்பவர் கருணாகரன்.. மிமிகிரி கலைஞர் ரமேஷ் திலக்.. பேய் விரட்டுபவர் ஸ்ரீநாத்.. தெருத் தெருவாகப் போய் சவரி முடி வியாபாரம் செய்பவர் மணிகண்டன்.
இவர்கள் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் இவர்களை ரூ. 2000 நோட்டு நண்பர்களாக்குகிறது.. அதனை வைத்து அவர்கள் டாஸ்மாக்கில் சரக்கடித்து கொண்டு இருக்கும் போது பிரச்சனை வருகிறது.. அந்த 2000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்பதை தன் முதலாளி மொட்ட ராஜேந்திரனிடம் சொல்கிறார் யோகி பாபு..
இவர்கள் பைசா கொடுக்காத காரணத்தினால் பிரச்சனையை சந்திக்கவே இவர்களுக்கு உதவ ஒரு ஐடியா கொடுக்கிறார் போலீஸ் ஜான் விஜய்..
இதனிடையில் மொட்ட ராஜேந்திரன் யாரோ சில நபர்களால் கொல்லப்பட அது இவர்கள் மீது பழி ஆக மாறி வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது? உண்மையில் கொலை செய்தவர்கள் யார்? இவர்கள் தப்பித்தார்கள்? அடுத்தது என்ன நடந்தது? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
Cast
Yogi Babu,V.T.V Ganesh , Ravi Mariya,Mottai Rajendran,Karunakaran, Ramesh Tilak, Mime gobi, John Vijay, Saravana subbaiah, G.marimuthu,Chaams,Madhusudhan Rao,Srinath, Manikandan.
யோகி பாபு , வி டி வி கணேஷ் , ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மணிகண்டன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ் , மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்..
படத்தில் பெரும்பாலும் ஆண்கள் இடம் பிடித்துள்ளனர்.. ஊறுகாய் அளவு கூட பெண்கள் இல்லை.. ஆனால் யோகி பாபு மனைவி மற்றும் குத்துப்பாட்டுக்கு ஒரு நாயகி உள்ளிட்டோர் மட்டுமே உண்டு.
Story screenplay dialogue
S.A. Padmanaban
Director – Srinath
Music Composer : BJORN SURRAO
Cinematographer : Masani
Editor : Elayaraja.S
Lyrics : Ramakrishna & Bjorn
STUNT : Sharp Shiva
DANCE : Radhika
Customer : Damodaran
Art : Mujeeb
PRO : Satish
மாசாணி ஒளிப்பதிவு செய்ய பிஜோர்ன் சுர ராவ் இசையமைத்திருக்கிறார். ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. மணிகண்டன் தயாரித்திருக்கிறார்..
ஒளிப்பதிவும் பாடல்களும் நேர்த்தி..
ஒரே கதை என்றாலும் ஒவ்வொரு நபர்களுக்கும் சின்ன சின்ன பிளாஷ்பேக்கைகள் வைத்து அதன் மூலம் சுவாரசியம் ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத்.
அதிலும்.. கெட்டதை அழிக்க சட்டப்படி முயலாமல் மற்றொரு தீயவழியில் முயலும் போலீஸ்.. அண்ணன் – தங்கை பாசம், ஆவிகளுடன் பேசும் போக்கு என்ன சின்ன சின்ன சுவாரசியங்கள் மூலம் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்..
Leg piece movie review