சரத்குமார் & சண்முக பாண்டியன் இணையும் ‘கொம்புசீவி’ பட போஸ்டர் ஷூட்டில் ராமச்சந்திரன்

சரத்குமார் & சண்முக பாண்டியன் இணையும் ‘கொம்புசீவி’ பட போஸ்டர் ஷூட்டில் ராமச்சந்திரன்

 

 

சரத்குமார் & சண்முக பாண்டியன் இணையும் ‘கொம்புசீவி’ பட போஸ்டர் ஷூட்டில் ராமச்சந்திரன்

 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அடையாளத்தை கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம்..

இவர்கள் இருவரும் இணைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை எடுத்து விஜய்சேதுபதி நடித்த படத்தையும் இயக்கினார்.. தற்போது விஜயகாந்த் மகனை வைத்து ‘கொம்பு சீவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

‘கொம்புசீவி* ‘படத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது,

1996ம் ஆண்டில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதிகளில் நடந்த உணமை கதைகளின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..

இந்தப் படத்தின் போஸ்டர் போட்டோக்களை டிசைன் செய்து வருகிறார் எல் ராமச்சந்திரன்.. இவர் உலகப் புகழ்பெற்ற போட்டோகிராபர் ஆவார்.. சமீபத்தில் சூரி சசிகுமார் நடித்த ‘கருடன்’ படத்தின் ப்ரோமோஷன் போட்டோ சூட்களையும் ராமச்சந்திரன் நடத்தியம் அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றதும் இங்கே கவனிக்கத்தக்கது..

Kombuseevi movie promotion shoot by Ramachandran