கிங்ஸ்ட்டன் விமர்சனம் 3.25/5.. கடலுக்கு அடியில் அமானுஷ்யங்கள்..

கிங்ஸ்ட்டன் விமர்சனம் 3.25/5.. கடலுக்கு அடியில் அமானுஷ்யங்கள்..
ஸ்டோரி…
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை.. கடற்கரையில் பெரிய வேலி அமைக்கப்பட்டுள்ளது.. இதுவே படத்தின் ஆரம்ப காட்சி என்பதால் படத்தின் மீதான சுவாரஸ்யம் ஏற்படுகிறது.. மீனவ மக்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்றால் என்ன காரணம்? ஏன் தடை என்பதுடன் படத்தில் கதை தொடங்குகிறது.
1982-ல் இறந்து போன அழகம் பெருமாள் என்பவரின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர். கிராமத்துக் கன்னிப் பெண்களும் அடிக்கடடி மாயமாகி யாரோ சிலரால் பிணமாகின்றனர்.
லோக்கல் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் நாயகன் கிங் (ஜி.வி.பிரகாஷ்) என்ன செய்கிறார் ? அவர் இந்த தடைகளை எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தில் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
ஜிவி பிரகாஷ்.. நாயகி திவ்யபாரதி.. இருவரும் தூத்துக்குடி வட்டார வழக்கு அழகாகவே பேசி படத்தின் கேரக்டருக்கு அழகு சேர்த்து இருக்கின்றனர்.. மீனவர் கிராமங்களின் எதார்த்த இளைஞர்களை ஜீவி & அவரது நண்பர்களும் அச்சு அசலாக கொடுத்திருப்பது சிறப்பு..
சின்ன கேரக்டர் வந்தாலும் வில்லத்தன நடிப்பில் சேத்தன் சிறப்பு… இவர்களுடன் அழகம்பெருமாள், ஷபு மோன், குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்டோரரும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்..
டெக்னீசியன்ஸ்…
எடிட்டர் ஷான் லோகேஷ் நீளத்தை கவனித்திருக்கலாம்.. கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் கடல் காட்சிகளும் கரை காட்சிகளும் கொள்ளை அழகு..
‘கிங்ஸ்டன்’ என்ற இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார் ஜிவி பிரகாஷ்.. இவரே இந்த படத்தில் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.. தனது சொந்த படம் என்பதால் இவரது உழைப்பும் முக்கியமாக. பின்னணி இசையிலும் பாடலிலும் தெறி லெவல்..
அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் என்பவரை இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜிவி பிரகாஷ்.. அதற்காக பாராட்டுகளை தெரிவிக்கலாம்.
கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் சூப்பர்.. படத்தின் மேக்கிங் வி எப் எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் லெவலுக்கு இருந்தாலும் கடல் அட்டை கடல் பேய்கள் என்பது நம்புபடியாக இல்லை.. முக்கியமாக அதில் குழப்பமான திரைக்கதையே காரணம்..
சமீபத்தில் தெலுங்கில் வந்த தேவாரம் மற்றும் தண்டேல் ஆகிய படங்களும் கடல் சார்ந்த மீனவ பிரச்சினைகளை சொல்லியிருந்தது.. ஆனால் அதில் பிரம்மாண்டமும் சுவாரசியமும் இருந்தது.. ஆனால் இந்த கிங்ஸ்டன் படத்தில் இந்த இரண்டுமே மிஸ்ஸிங் என்று சொல்லலாம்..
Kingston movie review