JUST IN – DD NEXT LEVEL கவர்ச்சி பாம் கவர்ச்சி மாம் நானே.. சிம்பு ஓபன் டாக் பிடிக்கும்.. விஜய் டயலாக் பேசிய கீத்திகா

JUST IN – DD NEXT LEVEL கவர்ச்சி பாம் கவர்ச்சி மாம் நானே.. சிம்பு ஓபன் டாக் பிடிக்கும்.. விஜய் டயலாக் பேசிய கீத்திகா

 

JUST IN – DD NEXT LEVEL கவர்ச்சி பாம் கவர்ச்சி மாம் நானே.. சிம்பு ஓபன் டாக் பிடிக்கும்.. விஜய் டயலாக் பேசிய கீத்திகா

 

 

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

நடிகர் ஆர்யாவின் தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் அடுத்த வாரம் மே 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் இதன் ஃப்ரீ ரிலீஸ் ஈவ்ண்ட் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் நிழல்கள் ரவி பேசும்போது…

நான் சந்தானத்துடன் டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.. அப்பொழுதுதான் காமெடி செய்வது எவ்வளவு கஷ்டம் என்று தெரியவந்தது.. வில்லனால் நடித்திருந்தாலும் காமெடி செய்யும்போது தான் அதன் கஷ்டத்தை உணர்ந்தேன்” என்று பேசினார்.

அதன் பிறகு நடிகை கஸ்தூரி பேசும்போது..

நான் சந்தானத்திற்கு அம்மாவா என்று முதலில் ஷாக்காகி விட்டேன். நான் தான் கவர்ச்சி பாம் அதே சமயம் கவர்ச்சி மாம் நான்தான்.. முதலில் அம்மா வேடம் என்று சொல்லும் போது தயங்கினேன்.. ஆனால் அதன் பிறகு அலப்பறை என்று சொன்னபோது ஓகே சொல்லிவிட்டேன்.

கஸ்தூரி பேசும்போது நடிகர் ஆர்யாவை முதலாளி முதலாளி என்று அழைத்தே பேசினார்.

சிம்புவை பற்றி சொல்லியாக வேண்டும்.. சிம்புவை எனக்கு திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் பிடிக்கும்.. காரணம் அவர் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதவர் ஓப்பனாக பேசுபவர் என்றார்.

2கே கிட்ஸ் மற்றும் 90ஸ் கிட்சுக்கு சந்தானத்தை பற்றி தெரியாது.. ஆனால் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சந்தானம் நடித்த போதே அவரைப் பற்றி எனக்குத் தெரியும்.. அப்போது முதலே அவரது காமெடி நான் ரசிக்க தொடங்கி விட்டேன்” என்று பேசினார் கஸ்தூரி.

Devils Double – டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் நாயகி கீத்திகா பேசும் போது..

“என் நெஞ்சில் குடியிருக்கும் என்று நடிகர் விஜய்யின் டயலாக்கை அவர் பேசி ஆரம்பித்த போது அரங்கத்தில் கரவொலி ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

Kasthuri speech at DD Next Level pre release event