கங்குவா திரை விமர்சனம்…

கங்குவா திரை விமர்சனம்…
ஸ்டோரி…
2024 கதை தொடங்குகிறது.. போலீசால் பிடிக்க முடியாத நபர்களை சூர்யா & யோகி பாபு பிடித்து தருகின்றனர்.. இவர்களுக்கு போட்டியாக திஷா பதானி & ரெட்டின் கிங்ஸ்லி செயல்படுகின்றனர்..
இந்த இரு போட்டிகளுக்கு இடையில் ஒரு சிறுவன் சிக்கிக் கொள்கிறான்.. அந்த சிறுவனைப் பார்க்கும்போதெல்லாம் சூர்யாவுக்கு ஏதோ ஒரு முன் ஜென்மம் பந்தம் இருப்பதாக கருதுகிறார்.
இந்த சூழ்நிலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கதை நகர்கிறது..
ஐந்து தீவுகளில் இயற்கை வளம் அதிகம் நிறைந்த தீவு பெருமாச்சி.. இதன் தலைவர் கங்குவா.. இந்த தீவை கைப்பற்ற முயற்சிக்கிறது ரோமானியப் படை.. எவ்வளவு முயன்றாலும் அவர்களால் முடியவில்லை..
இந்தக் கட்டத்தில் மற்றொரு தீவில் உள்ள நட்டி நடராஜனுக்கு பணத்தாசை காட்டி சதி திட்டம் போடுகிறது ரோமானிய படை.. அதன்படி நட்டி பெரும்மாச்சி மக்களைக் கொன்று குவிக்கிறார்.. இதனால் சூர்யாவுக்கும் நட்டிக்கும் மோதல் ஏற்படவே அவரை தீ வைத்து கொளுத்தி விடுகிறார் சூர்யா.
அப்போது நட்டியின் மகனை சூர்யா கையில் ஒப்படைத்து விட்டு இவனை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என சொல்லிவிட்டு நட்டியின் மனைவியும் தீயில் விழுந்து மரணம் அடைகிறார்.
அந்த தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற சூர்யா போராடுகிறார்.. தந்தை செய்த தவறுக்கு மகன் பொறுப்பாக முடியாது.. மன்னித்து விடலாம் என்கிறார்.. இதனால் பெருமாட்சி மக்களுக்கும் சூர்யாவிற்கும் பிரச்சனை எழுகிறது
இந்த சூழ்நிலையில் இந்த சிறுவனுக்கும் 2024 வரும் சிறுவனுக்கும் என்ன பந்தம்.. என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
1070 காலகட்டம் மற்றும் 2024 என இரண்டு காலகட்டங்களில் சூர்யா.. இதில் கங்குவா சூரிய கலக்கல் சூர்யாவாக மனதில் இடம் பிடிக்கிறார்.. தன் உடல் உடல் மொழி என அனைத்தையும் கங்கு வக்கிரகத்திற்காக அர்ப்பணித்து இருக்கிறார்.. ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார்.. அதே சமயம் பெரும்பாலும் படத்தில் கத்தி கத்தி காதுகளுக்கு இரைச்சலை கொடுத்து விட்டார்..
நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், கருணாஸ், பிரேம் குமார் ஆகியோரின் முகங்கள் தெரிவதற்கே சில நிமிடங்கள் பிடிக்கிறது.. ஒப்பனை நிறைந்த முகமாக இருப்பதால் கண்டுபிடிக்க தாமதம்..
உதிரா இனத்தின் தலைவராக பாலிவுட் நடிகர் பாபி தியோல்.. தோற்றத்தில் கொஞ்சம் மிரட்டவும் செய்து இருக்கிறார்..
2024 வரும் கேரக்டர்கள் அனைத்தும் தேவையில்லாத ஒன்று.. நாயகி திஷா பதானி ஏதோ ஒரு பாடலுக்கு வரும் ஊறுக்காய் நாயகி போலவே வருகிறார்.. யோகி பாபு & ரெடின் கிங்ஸ்லி காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றி விட்டனர்.. கோவை சரளா & கே.எஸ்.ரவிக்குமார் இவர்கள் பேசும் தமிழ் கூட ஒட்டவில்லை..
டெக்னீசியன்ஸ்…
கங்குவா என்ற கேரக்டரை சூர்யா சுமந்திருக்கிறார் என்றால் ‘கங்குவா’ படத்தை ஒட்டுமொத்த தொழில் நுட்ப கலைஞர்கள் மட்டுமே தாங்கி இருக்கிறார்கள்..
“நெருப்பு..”, ”தலைவா…” மற்றும் மன்னிப்பு ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.. ஆனால் சில காட்சிகளில் வசனங்களை மீறி இவரது இசை இரைச்சல்..
மறைந்த படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் கூடுதல் மெனக்கெட்டு இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. ஆனால் 2024 சீன்ஸ் வேஸ்ட் ரகம்..
கலை இயக்குனர் மிலனின் பங்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது.. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் பேச்சு மொழி உடை அனைத்தையும் தத்துரூபமாக கொடுத்திருப்பது சிறப்பு..
கங்குவா & கலைராணி உள்ளிட்ட பலரின் அலறல் சத்தங்கள் காதை கிழிக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட இலக்கிய தமிழ் சில காட்சிகள் வருகிறது.. திடீரென இன்றைய தமிழும் வருகிறது.. இரண்டையும் கலந்திருப்பது குழப்பம்..
வெற்றியின் ஒளிப்பதிவு தான்.. படத்தின் ஹைலைட்.. படத்தின் மேக்கிங்கை மிரட்டலாக கொடுத்து இருப்பது வெற்றியே..
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் குழுவினர் பணி சிறப்பு..
சிறுத்தை வீரம் விசுவாசம் அண்ணாத்த என பல படங்களில் நாம் ரசித்த இயக்குனர் சிவா முற்றிலும் மாறுபட்ட கதை களத்தை தேர்ந்தெடுத்து வித்தியாசமான படைப்பை கொடுக்க முயன்றிருக்கிறார்.
முன் ஜென்மம் பந்தம், தாய் மீது சத்தியம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை படத்தை எமோஷனலாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சிவா..
3D வடிவில் இப்படி ஒரு பிரம்மாண்டத்தை தமிழ் இயக்குனரால் கொடுக்க முடியும் என முயற்சித்து இருக்கிறார் சிவா..
கங்குவா பார்ட் 2க்கு தொடர்புடையதாக கார்த்தியின் கதாபாத்திரத்தை கிளைமாக்ஸ் இணைத்து இருக்கிறார் இயக்குனர்.. இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு வில்லனாக கார்த்தி வருவார் என எதிர்பார்க்கலாம்.
நிகழ்கால கதை அதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் நடிகர்கள் தேர்வு & சிறுவன் கதாபாத்திரங்களில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம் டைரக்டர் சிவா..
இந்த குழுவினரின் பிரம்மாண்ட உழைப்புக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..
Kanguva movie review