கம்பி கட்ன கதை விமர்சனம்… ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் உண்டு

கம்பி கட்ன கதை விமர்சனம்… ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் உண்டு

கம்பி கட்ன கதை விமர்சனம்… ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் உண்டு

 

ஸ்டோரி…

அரசர் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற ஒரு வைரம் பல ஆண்டுகளைக் கடந்து நாயகன் நட்டி கைக்கு கிடைக்கிறது.. இதை போலீஸ் அதிகாரியே கைப்பற்ற சொன்னாலும் அவர்களுக்கு கொடுக்காமல் அவர்களை ஏமாற்ற ஒரு இடத்தில் புதைத்து வைக்கிறார்.. ஆனால் ஆறு மாதங்களில் அந்த இடம் முற்றிலுமாக மாறிவிடுகிறது..

தூங்கும் சாமியார் என்ற ஆசிரமத்தில் தான் அது இருப்பதால் அங்கு இவர் சாமியார் வேடத்தில் நுழைகிறார்.. நண்பர்கள் உதவியுடன் வைரத்தை தேடினாலும் அந்த இவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தூங்கும் சாமியார் மடத்தில் தங்கி இருக்கும் இவரை அந்த ஊர் மக்கள் ஒரு பெரிய வரம் கொடுக்கும் சாமியாராக நினைக்கின்றனர்.. இதனால் இவருக்கு பல மடங்கு செல்வாக்கு உயர்கிறது.. பல தொழில் அதிபர்களும் அரசியல்வாதிகளும் இவரிடம் வரம் கேட்டு வந்து செல்கின்றனர்..

இதன் பிறகு அவர் என்ன செய்தார்.? வைரத்தை கண்டுபிடித்து அங்கிருந்து சென்றாரா அல்லது சாமியாராக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சதுரங்க வேட்டை படத்தில் திருட்டு மோசடி பேர் வழியாக கலக்கியவர் நட்டி நடராஜ்.. எனவே மோசடி பேர்வழி என்றால் கூப்பிடுங்கள் நட்டியை என்று சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் கம்பி கட்டி இருக்கிறார்.. ஆனால் சதுரங்க வேட்டை படத்தில் எப்படி எல்லாம் ஒருவனை ஏமாற்ற ஸ்கெட்ச் போடுகிறார் என்று விறுவிறுப்பு இருந்தது.. ஆனால் இதில் வெறுமனே எல்லாரும் ஏமாளிகள் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்பது போலவே லாஜிக் குறைகள் இருக்கிறது..

கதைநாயகனாக முகேஷ் ரவி.. சிக்ஸ் பேக் உடலைக் காட்டி பெண்களை வசியப்படுத்தினாலும் நடிப்பில் கூடுதல் கவனம் தேவை..

நாயகிகளாக ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி.. சாப்பாட்டுக்கு ஊறுகாய் வேணும் என்பது போல படத்திற்கு நாயகிகள் தேவை போல..

சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட பல காமெடியன்கள் இருந்தாலும் சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிகிறது..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் – ஜெய் சுரேஷ் இசையமைப்பாளர் – சதீஷ் செல்வம்.. இருவரும் தங்களால் முடிந்த பணியை செய்துள்ளனர்..

இயக்குனர் – ராஜநாதன் பெரியசாமி..

நாட்டில் நடக்கும் அரசியலை போலீ சாமியார் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.. அதே சமயம் லாஜிக் மீறலாக இருப்பதால் படத்தில் ஒன்ற முடியவில்லை.. முக்கியமாக கோதண்டம் ஜாவா சுந்தரேசன் வரும் காட்சிகள் ஏற்புடையதாக இல்லை.. அந்த காட்சிகளை நீக்கினாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை..

முக்கியமாக நித்தியானந்தா மற்றும் தனி தீவு கைலாசவை கிண்டல் அடிக்கும் பல காட்சிகள் இருக்கிறது.. டபுள் மீனிங்க்கு பஞ்சமில்லை…

லாஜிக் பாக்காதீங்க.. எங்க படத்தை பாருங்கள் என்று கம்பி கட்டும் கதையை படக்குழுவினர் சொன்னால் சென்று பார்த்துவிட்டு வரலாம்..

 

Kambi Katna Kadhai movie review