‘ஐயையோ…’ இது தெரியுமா.? ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் பாடிய ஆல்பம்

‘ஐயையோ…’ இது தெரியுமா.? ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் பாடிய ஆல்பம்
*ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் அசத்தலான அறிமுகம்.. இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்*
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான ‘ஐயையோ’ மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்.
பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், “ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். ‘தேவ்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது ‘ஐயையோ’ பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மிக்க மகிழ்ச்சி,” என்றார். தனது நான்காம் வயது முதல் டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின் படி சாமுவேல் நிக்கோலஸ் இசையை கற்று வருவது குறிப்பிடத்தக்கது.
‘ஐயையோ’ பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத சனா மரியம் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு: ஜாயித் தன்வீர்; நடனம்: ஆலிஷா அஜித்; உடைகள்: ஹர்ஷினி ரவிச்சந்தர்: கலை இயக்கம்: பிரதீப் ராஜ்; எடிட்/வி எஃப் எக்ஸ்: கிரியேட்டிவ் கிரவுட், சிவசுந்தர், சாய் முத்துராமன்; ஒலி வடிவமைப்பு: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி; கலரிஸ்ட்: மனோஜ் ஹேமச்சந்தர்.
Harris Jayaraj son Samuel Nicolas album titled Aiyaiyo