ஹரி ஹர வீர மல்லு திரை விமர்சனம்…

ஹரி ஹர வீர மல்லு திரை விமர்சனம்…

 

ஹரி ஹர வீர மல்லு திரை விமர்சனம்…

 

ஸ்டோரி…

1600களில் இந்த படத்தின் கதை நடக்கிறது..

மிகப்பெரிய செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வருகிறார் நாயகன் பவன் கல்யாண்.. சுருக்கமாக சொல்லப்போனால் ராபின்ஹுட் போல நவாப் ஆட்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்கு கொடுத்து மக்கள் தலைவனாக வாழ்கிறார் வீர மல்லு..

இதனிடையில் அடிமைப்பட்டு கிடக்கும் நிதி அகர்வால் பார்த்ததும் காதல் கொள்கிறார்… ஆனால் நாயகியின் சூழ்ச்சியோ வேறு கதை..

நாயகனின் திருட்டுத் திறமையை பார்த்த நவாப் அவருக்கு வேறு ஒரு டாஸ்க் கொடுக்கிறார்.. ஏற்கனவே இவரிடம் இருந்து திருடப்பட்ட நம்முடைய கோஹினூர் வைரத்தை மீட்க சொல்கிறார்.. அதனடிப்படையில் நாயகன், நாசர் உள்ளிட்ட ஒரு சிலரை துணைக்கு வைத்துக்கொண்டு கோஹினூர் வைரத்தை தேடி செல்கிறார்..

அதே சமயம் நாயகன் பவன் கல்யாண் வேறு ஒரு திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறார்.. அது என்ன திட்டம்.? அதன் பிறகு என்ன நடந்தது.? அவுரங்கசீப் இடமிருந்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றினாரா.? இறுதியில் என்ன ஆனது.? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஏ.எம். ரத்னம் மற்றும் தயாகர் ராவ் இணைந்து தயாரித்துள்ளனர்..

இதில் பவன் கல்யாண், நிதி அகர்வால், நாசர், பாபி தியோல், சத்யராஜ், சுனில், அனுசுயா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

 

நாயகன் பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்.. அவரின் பில்டப்புக்காகவே பல காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா.. நாயகன் அறிமுக காட்சி முதல் பல காட்சிகளில் சண்டைக் காட்சியிலும் அனல் பறக்கிறது.. பவன் கல்யாண் முக பாவனைகளில் பெரிய மாற்றம் இல்லை.. ஆக்சன் ரொமான்ஸ் எல்லாம் ஒரே எக்ஸ்ப்ரசன் தான்..

நாயகி நிதி அகர்வால் கொள்ளை அழகு.. அவரது அறிமுக காட்சியில் இடுப்பு, பின்னழகு, கண்கள், உதடு என காண்பிக்கும் போதே கிறங்கி போவார்கள்..

நாசர், பாபி தியோல், சத்யராஜ், சுனில், அனுசுயா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. இவர்களுக்கு பெரிதாக ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை..

டெக்னீசியன்ஸ்…

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பெரிய பலம்.. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசை தெறிக்க விட்டுள்ளார்.. பல இடங்களில் கொஞ்சம் ஓவராகவே பில்டப் கொடுத்திருக்கிறார்..

ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார் தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் பல காட்சிகளை வைத்து அசத்தியிருக்கிறார்.. ஆனால் இது தமிழ் ரசிகர்களை கவருமாய் என்பது சந்தேகம் தான்.. முக்கியமாக கம்ப்யூட்டர் கிராபிக் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டு கொடுத்த பிரம்மாண்டத்தை அழகுப்படுத்தி இருக்கலாம்..

பெரும்பாலும் சண்டைக் காட்சிகளில் எந்த காட்சிகளும் நம்பும்படியாக இல்லை.. சண்டைக் காட்சிகளில் பல அடிகள் பட்டு ரத்தம் தெறிக்க வந்த நாயகன் முகத்தில் எந்த ஒரு சோர்வும் காணப்படவில்லை.. இப்படியாக பல காட்சிகளில் நாயகன் பிரஷ் ஆகவே காணப்படுகிறார்..

துணை முதல்வர் பவன் கல்யாண் காகவே பல அரசியல் வசனங்களையும் இணைத்து இருக்கிறார் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா..

1600 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பரவி கிடந்த ஹிந்து முஸ்லிம் வேற்றுமை உள்ளிட்ட காட்சிகளை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. அதே சமயம் இஸ்லாமியர்களை எதிர்த்து இந்துக்கள் செய்த புரட்சியும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..

 

Hari Hara Veera Mallu movie review

 

——-