Game of Loans விமர்சனம்.. கடன் வாங்காதே.. வாங்கினா கட்டித் தொலை..

Game of Loans விமர்சனம்.. கடன் வாங்காதே.. வாங்கினா கட்டித் தொலை..

 

Game of Loans விமர்சனம்.. கடன் வாங்காதே.. வாங்கினா கட்டித் தொலை..

 

 

90 நிமிடங்கள் படம் ஓடுகிறது.. படத்தில் 4 பேர் மட்டுமே நடித்துள்ளனர்.. இந்தப் படத்தின் கேரக்டரும் ரன்னிங் டைமும் ஆறுதலாக இருப்பதால் இந்த படத்தை பார்க்க நிச்சயம் ஆவல் உண்டாகும்..

 

ஸ்டோரி…

சூதாட்டத்தில் பணத்தை தொலைத்த நாயகன் மீண்டும் ஜெயிக்க ஆன்லைன் லோன் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுகிறார்.. இதனால் கடன் மேல் கடன் வந்துவிட இவரது குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது.. இதனால் இவருக்கு என்ன பிரச்சனைகள் வந்தது என்பதுதான் இந்த படத்தின் மொத்த கதை..

Get Money App மூலம் ஆன்லைன் லோன் எடுத்த நாயகன் கடனை திருப்பி கட்டாமல்.. ஒரு கட்டத்தில் அந்த லோன் ரெக்கவரி மூலம் வரும் இரு நபர்களால் மிரட்டப்படுகிறார்.. ஒரு வாரத்தில் 65 லட்சம் பணத்தை நீ கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர்..

ஆனால் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாதவர் சூதாட்டத்தால் வாழ்க்கையை தொலைத்த நாயகன் என்ன செய்தார்.?

நீ தற்கொலை செய்து கொண்டால் உன் இன்சூரன்ஸ் பணம் கிடைத்துவிடும்.. எனவே நீ தற்கொலை செய்து கொள் என மிரட்டுகிறார்.. நாயகன் என்ன செய்தார்.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ABINAY KINGER as Vishwa

NIVAS ADITHAN as Daniel

ESTER NORONHA as Janet

ATHWIK JALANDHAR as Ashok

சூதாட்டம் மது அருந்துதல் சிகரெட் பிடித்தல் என எப்போதும் பாட்டிலும் புகையமாகவே வீட்டிலேயே வலம் வருகிறார் நாயகன் NIVAS ADITHAN.. எதையும் சமாளித்து விடலாம் என்ற ஒரு தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து போகும் காட்சியில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்..

கடன் வாங்கிய பணத்தை ரெக்கவர் செய்யும் ஆபீஸராக வரும் அபிநய் நாயகனை மிரட்டும் காட்சிகள் கொடூரம்.. நாயகன் வாடா போடா என மரியாதை இல்லாம திட்டினாலும் அதை எல்லாம் சமாளித்து இவர் பேசும் ஸ்டைலிஷ் மிரட்டல் வேற லெவல்..

பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் ஒருவரை தற்கொலை செய்ய தூண்டும் அளவுக்கு இவர் மிரட்டும் ரகம் கொஞ்சம் பதட்டத்தை உண்டாக்குகிறது..

ATHWIK JALANDHAR என்பவரும் பட முழுக்க உடன் இருந்து கவனத்தை ஈர்க்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று… அதை சட்டென்று முடிக்காமல் கொஞ்சம் நீட்டி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்..

டெக்னீசியன்ஸ்…

DIRECTOR : ABISHEK LESLIE

PRODUCER : N. JEEVANANTHAM JRG PRODUCTION

DOP : SABARI

EDITOR : D. PRADEEP JENIFER

ART : SAJAN

MUSIC DIRECTOR : JOE COSTA

SCREENPLAY & DIALOGUES : ABISHEK LESLIE, SHIVA, SUBRAMANIAN, VINO

PRO : R MANI MADHAN

ஒரே வீட்டிற்குள் படம் முழுவதும் எடுக்கப்பட்டிருக்கிறது.. அதை ஒரு சவாலாக எடுத்து தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. அதற்கு ஏற்ப ஒவ்வொரு இடத்தில் லைட்டிங் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு..

பின்னணி இசையும் இந்த பதட்டத்துடன் நம்மை ஒன்றை வைப்பது சிறப்பு.

எந்த ஒரு உத்திரவாதமும் இல்லாமல் கடன் எப்படி தருகிறார்கள் என்பதை விளக்கும் காட்சி நமக்கு பயத்தை உண்டாக்கும்..

ஒருவர் கடன் வாங்கும் போதே அவர் மீது கடன் கொடுப்பவர்கள் இன்சூரன்ஸ் எடுத்து விடுகின்றனர். கடன் கட்ட முடியவில்லை என்றால் அதன் விளைவாக நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த இழப்பீட்டுத் தொகை நிறுவனத்திற்கு சேரும்.. இதனை மையப்படுத்தி திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார் இயக்குனர் அபிஷேக்..

கடன் வாங்கிவிட்டு அலட்சியமாக சுற்றும் நபர்களுக்கு இந்த படம் ஒரு எச்சரிக்கை.. இனியாவது கடன் வாங்குபவர்கள் தகுதிக்கு மீறி ஆசைப்படாமல் கடனை அடைக்க வேண்டும்.. இல்லை என்றால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்படலாம் என்பதை ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வாக இயக்குனர் கொடுத்து இருப்பது சமூகத்திற்கு தக்க பாடமாகும்..

இப்போது உன் மகனுக்கு ஐந்து வயது, நீ உயிரோடு இருந்தால் அந்த கடனை அடைக்க 15 வருடமாகும்.. அந்த 15 வருடமும் நீ உன் குடும்பத்திற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியாது…

எனவே நீ இப்போது இறந்து விட்டால் உன் குடும்பம் இனியாவது நல்ல வாழ்க்கையை வாழும்.. உன் மகனுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.. பணம் கிடைக்கும் என்று வில்லன் மிரட்டுவது எச்சரிக்கை பயம்..

 

Game of Loans movie review