இந்தியாவில் முதன்முறை.. கட் அவுட்டிலும் பிரம்மாண்டம்.. ராம் சரண் ரசிகர்கள் சாதனை

இந்தியாவில் முதன்முறை.. கட் அவுட்டிலும் பிரம்மாண்டம்.. ராம் சரண் ரசிகர்கள் சாதனை
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் சங்கர்தான்..
இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடித்த கேம் சேஞ்சர் என்ற படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். ஊழல் அமைப்புக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்க எஸ். ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.. தமன் இசையமைத்துள்ளார்
இப்படத்தின் “ஜரகண்டி” ,’ரா மச்சா மச்சா’ மற்றும் ‘லைரானா’ பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘லைரானா’ பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக ராம்சரண் ரசிகர்கள் அவருக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கட்டவுட் 256 அடி உயரத்தில் வடிவமைத்துள்ளனர்..
இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு 2025 ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Game Changer release 256 ft cutout for Ramcharan