டியூட் விமர்சனம் 4/5.. ஜாதி மீறிய லவ் மேரேஜ் அசிங்கமுன்னா செத்துடுங்க DUDE

டியூட் விமர்சனம் 4/5.. ஜாதி மீறிய லவ் மேரேஜ் அசிங்கமுன்னா செத்துடுங்க DUDE

 

 

டியூட் விமர்சனம் 4/5.. ஜாதி மீறிய லவ் மேரேஜ் அசிங்கமுன்னா செத்துடுங்க DUDE

 

ஸ்டோரி…

அமைச்சர் சரத்குமாரின் மகள் மமீதா பைஜு.. சரத்தின் தங்கை ரோகினியின் மகன் பிரதீப் ரங்கநாதன்.

அத்தை பையன் பிரதீப்பை காதலிக்கிறார் மமீதா.. ஆனால் காதல் இல்லை என்று மறுத்துவிடுகிறார் பிரதீப்.. ஆனால் 6 மாதத்திற்கு பிறகு காதல் உணர்வு வர சரத்குமாரிடம் சொல்கிறார்.. இதனையடுத்து சரத்குமாரை திருமண ஏற்பாடுகளை செய்து வைக்கிறார்.

ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார் மமீதா.. ஆனால் அவன் வேறு சாதி பையன் என்பதால் சரத் தன் அதிகாரத்தால் மிரட்டுகிறார்…

உன்னுடன் வாழ எனக்கு விருப்பமில்லை என்று பிரதீப்பிடம் சொல்லிவிடுகிறார் மமீதா.. அதன் பிறகு என்ன ஆனது..? மாமா மகளின் காதலை சேர்த்து வைத்தாரா.? அல்லது மாமாவை மிரட்டலுக்கு கட்டுப்பட்டு திருமணம் செய்து கொண்டாரா.? என்ன நடந்தது என்பதெல்லாம் இந்த டியூட் கதை..

 

கேரக்டர்ஸ்…

நடிப்பு : பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிர்து ஹாரூன், ரோகினி,

 

கதாநாயகனாக நடிகராக லவ் டுடே.. டிராகன் தற்போது டியூட் என ஹாட்ரிக் வெற்றி அடித்து இளைஞர்களின் ஃபேவரைட் DUDE ஆக மாறிவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.. எந்த ஒரு ஹீரோவுக்கும் இப்படி ஒரு தாலி சென்டிமென்ட் கிடைத்திருக்குமா தெரியாது.. தாலியை அறுத்து தாறுமாறு என்ட்ரீ கொடுக்கிறார் ஹீரோ மெட்டீரியல் பிரதீப்..

மமீதாவின் காதலனாக வரும் ஹிர்து ஹாரூன் தேர்வு சொதப்பல்.. இந்த கேரக்டர் படத்திற்கு மெர்ஜாகவில்லை..

பிரேமலு படத்தில் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட மமீதா பைஜு இதில் நம் மனங்களில் தஞ்சம் கொள்கிறார்.. சில இடங்களில் ஒட்டாத காதலாக இருந்தாலும் நடிப்பில் அதை நிவர்த்தி செய்கிறார்..

வில்லத்தனத்தில் காமெடி கலந்து மிரட்டி இருக்கிறார் சரத்குமார்.. இவரின் காட்சிகள் படத்தில் கலகலப்புக்கு செம ரூட்..

பரிதாபங்கள் டிராவிட் பிரண்ட் ஆக வந்து சிரிக்க வைக்கிறார்… மமீதாவிடம் நீ சோறு தான் திங்கிரியா.? என்று பேசும் வசனம் செம.. ஆனால் அழகான பெண்ணுக்கு அந்த அறிவு கூட இல்லையா என்பது கேள்வி.?

டெக்னீசியன்ஸ்…

இசை : சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு : நிகேத்பொம்மி

தயாரிப்பு : மைத் ரி மூவீஸ்
இயக்கம் : கீர்த்திஸ்வரன்

என்னதான் ஜாலியான இருந்தாலும் இப்படி ஒரு கணவன் இருப்பானா.? காதலனுடன் சேர்த்து வைக்க இருப்பானா.? அவனின் குழந்தைக்கு தந்தையாக இருப்பானா? என்றெல்லாம் கேள்வி வரும்.. ஆனால் அதை எல்லாம் சுபமாக முடித்து கிளைமாக்ஸில் மெசேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்..

முக்கியமாக வசனங்கள் கைதட்டலை அள்ளுகிறது.. சரத்குமாரிடம் ஆணவக் கொலைகள் பற்றி பிரதீப் பேசும்போது “அவ்வளவு அசிங்கமாக இருந்தா நீங்க சாவுங்கடா.. என்று சொல்வதும்.. “தாலிக்கு மரியாதை இல்லை… தாலியை கட்டிய பெண்ணின் உணர்வுக்கு தான் மரியாதை என்றும் சொல்லும் இடங்களில் பிரதீப் பிரகாசிக்கிறார்..

சரத்குமார் & கருடா ராம் சந்திக்கும் காட்சி இடைவேளையாக இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடி இருக்கும்.. இடைவேளைக்குப் பிறகு வரும் சில கிரென்ச் காட்சிகள் நம்ப முடியவில்லை..

ஆனாலும் இதை இன்றைய இளைஞர்கள் பெண்கள் ஏற்பார்கள் என்ற மன ரீதியில் லாஜிக் பார்க்காமல் படத்தை ரசிக்கலாம்..

சாய் அபயங்கரின் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பிளஸ்.. ஆனால் எதிர்பார்த்த பாடல் ‘அவ அழகுல காரணமா. என்ற பாடல் ஏமாற்றம் அளிக்கிறது.. படம் முழுவதும் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவை கொடுத்து படத்துடன் ஒன்ற வைக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத்பொம்மி..

ஆக.. தாலியை கழட்டி வைக்கும் பெண்களும் அதை ஏற்கும் மனநிலையில் உள்ள கணவர்களும் இளைஞர்களும் இந்த படத்தை பார்த்து தீபாவளியை என்ஜாய் செய்யலாம்..

Dude movie review