டீசல் விமர்சனம்… 3.75/5.. கச்சா எண்ணெயில் கலந்த திருட்டு அரசியல்

டீசல் விமர்சனம்… 3.75/5.. கச்சா எண்ணெயில் கலந்த திருட்டு அரசியல்

டீசல் விமர்சனம்… 3.75/5.. கச்சா எண்ணெயில் கலந்த திருட்டு அரசியல்

 

இந்தப் படத்திற்கு டீசல் கதைக்களமாக இருந்தாலும் நாயகனின் பெயரும் டீசல் என்று அழைக்கப்படுகிறது..

 

ஸ்டோரி…

சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண் கச்சா எண்ணெய் சார்ந்த தொழிலை செய்து வருகிறார்..

இவரது வேலையானது இந்தக் கச்சா எண்ணெயை பிரித்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக பங்குகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.

ஆனால் இதனிடையில் இவரால் பிரித்து அனுப்பப்பட்ட எண்ணெய்கள் கிலோ கணக்கில் குறைந்து காணப்படுகிறது.. மேலும் அதில் கலப்படமும் இருப்பதும் தெரிய வருகிறது..

இந்த திருட்டு வேலைக்கு காரணமானவர் விவேக் பிரசன்னா.. இவருக்கு பக்கபலமாக உதவியாக இருக்கிறார் போலீஸ் வினய்.. இதனை அறிந்து வினய் மீது கை வைத்து விடுகிறார் ஹரிஷ்.. இதனால் அவரை காவல்துறையே தேடி வருகிறது.. இதனால் தலைமறைவாகிறார்.

இந்த சூழ்நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவராகிறார் விவேக் பிரசன்னா.. கலப்படம் அதிக அளவில் அதிகரிக்கிறது.

பல இடங்களில் வாகனங்கள் பழுதாகி நிற்கிறது.. மக்கள் தவித்துக் கொண்டிருக்க இதனை பயன்படுத்தி வடநாட்டு அரசியல்வாதி ஒருவர் வேறு ஒரு சதி திட்டம் தீட்டுகிறார்..

இதன் பிறகு நாயகன் என்ன செய்தார்.? கலப்படங்களை மக்களுக்கு தெரிவித்தாரா.? அதன் பின்னணியில் நடக்கும் அரசியல் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

வட சென்னை வாலிபனாக மீனவராக ஹரிஷ் கல்யாண்.. கொடுத்த பாத்திரத்தில் சிறப்பு.. ஆனால் அந்த பகுதியில் வாழும் ஒருவருக்கு உண்டான உடல் மொழி மெச்சூரிட்டி இல்லை.. (ஆனால் இவரின் அம்மா ஒரு வட இந்திய சேட்டு பெண் என்பதால் நிறம்ஒத்துப்போகிறது.)

ஆக்சன் படம் என்றாலும் அளவோடு அந்த மீட்டரில் புகுந்து விளையாடி இருக்கிறார்.. அதுல்யா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார் ஆனால் இவருக்கான ஸ்பேஸ் குறைவு..

தந்தையாக சாய்குமார் தன் அனுபவ நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.. வினய் & விவேக் பிரசன்னா இருவருக்கும் வித்தியாசமான வேடம்.. இருவரும் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

இசை : திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு : ரிச்சர்டு எம்.நாதன்..

திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசை மிரட்டல் ரகம்.. ஒளிப்பதிவாளர் கைவண்ணம் பக்க பலம்.. முக்கியமாக மீனவ கிராமங்கள், கடலில் நாயகன் தலைமறைவு, கச்சா எண்ணெய் அது தொடர்பான பெரிய குழாய் காட்சிகள் படத்தை பிரமிக்க வைக்கிறது..

தமிழ் சினிமாவில் மெடிக்கல் மாபியா கல்வி மாஃபியா என பலவற்றை பார்த்திருக்கிறோம்.. ஆனால் கச்சா எண்ணெய் திருட்டு.. அரசியல் காவல்துறை.. மீனவ மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் கலந்து சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.

 

Diesel movie review