டியர் ரதி விமர்சனம்… வெள்ளி திரையிலும் சின்னத்திரை சீரியல்..!

டியர் ரதி விமர்சனம்… வெள்ளி திரையிலும் சின்னத்திரை சீரியல்..!

டியர் ரதி விமர்சனம்… வெள்ளி திரையிலும் சின்னத்திரை சீரியல்..!

 

ஸ்டோரி…

நாயகன் சரவண விக்ரம்.. இவருக்கு பெண்களிடம் பேசுவது என்றாலே கூச்சம்.. நண்பனின் கூச்சத்தை போக்க இவரது மற்ற நண்பர் விபச்சாரியிடம் அழைத்து செல்கிறார்.. (நாயகி அஸ்லி.. படத்தில் இவரது கேரக்டர் பெயர் ரதி..)

ரதி அழகில் மயங்கும் இவர் ஒரு நாள் முழுவதும் உன்னுடன் இருக்கலாமா.? டேட்டிங் செய்யலாமா? என்று கேட்கிறார் அதற்கு ஒப்புக்கொள்ளும் நாயகி அஷ்லி அதற்கு ஒரு கட்டணமும் சொல்கிறார்.

அதன்படி இருவரும் ஒரு நாள் முழுக்க டேட்டிங் செய்து கொண்டிருக்கும் வேளையில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.. அதாவது அஸ்லி ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியை திருடிக் விடுகிறார.. எனவே போலீஸ் தேடுகிறார்..

இது ஒரு புறம் இருக்க வில்லன் வரதன் ரதி வேண்டும் என இவரை துரத்துகிறார்.. அவர் துரத்துவதற்கு மற்றொரு காரணம். இப்படியாக பல கோணங்களில் ரதியை தேடி பலரும் அலைகின்றனர்.. இவர்களின் தேவை என்ன.? ரதி என்ன செய்தார்? சரவண விக்ரம் என்ன ஆனார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..


கேரக்டர்ஸ்….

சரவண விக்ரம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியலில் நடித்தவர் தான் இந்த பட கதை நாயகன்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.. சீரியல் போல படமா தொடங்கும்போதே பேசுகிறார் பேசுகிறார் பேசிக்கொண்டே இருக்கிறார். இவருக்காக கேரக்டர் வடிவமைக்கப்பட்டதா என்று தெரியவில்லை படத்தை ஸ்டார்ட் பண்ணுங்கப்பா என்ற ரசிகரின் குரல் ஒலிக்குது.. பல காட்சிகளில் இவரது ஹேர் ஸ்டைல் கன்டியூனிட்டி மிஸ்ஸிங்.. இயக்குனர் கவனிக்கவில்லையா.?

ஹஸ்லி அமான்.. – இவர் தான் ரதி என்று கேரக்டரை தாங்கியிருக்கும் படத்தின் ஆணிவேர்.. நடிப்பிலும் கண்களிலும் கவர்கிறார்.. இவர் பிளாஷ்பேக் சொல்லும்போதும் நாயகன் வருகிறார்.. அதில் வித்தியாசத்தை இயக்குனர் காட்டி இருந்தாலும் எல்லா காட்சியிலும் நாயகன் வருவது தேவையா.?

வரதன் என்ற வில்லன் கேரக்டரில் ராஜேஷ் பாலச்சந்திரன்.. இவரது கேரக்டர் எதிர்பார்ப்பை வர வைத்தாலும் போதுமான வலுவில்லை..

காட்வின் ஆக சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் ஆக யுவராஜ் சுப்பிரமணியம்.. ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. சீன்கள் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது..

ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார்.. பிளாக் காமெடி என்ற கதைக்கு ஏற்ப இவரது பின்னணி இசை அமைந்திருக்கிறது.. ஆனால் காமெடியில் சிரிப்பு தான் வரவில்லை..

எடிட்டர் பிரேம் – நம்மை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிட்டார்.. ஒரு காட்சி முடிவதற்குள் அடுத்த காட்சி அடுத்த காட்சி முடிவதற்கு முதல் காட்சி.. இப்படியாக என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாதபடியே படத்தை முடித்து இருப்பது எடிட்டர் மேல் எரிச்சலை உண்டாக்குகிறது..

பிரவீன் கே மணி என்பவர் இயக்கியிருக்கிறார்.. விலை மாதுவுக்கும் இங்கே காதல் உண்டு என்பதை சொல்ல முயற்சித்து ஏதேதோ சொல்லி இருக்கிறார்.

சூது கவ்வும் மற்றும் நேரம் உள்ளிட்ட படங்கள் பாணியில் முயற்சித்திருக்கிறார்.. ஆனால் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு சரியாக அமையவில்லை என்பதால் டியர் ரதி.. சாரி ரதியாக அமைந்து விடுகிறது…

நாயகனுக்கு இரண்டு ஆசை இருப்பதாக சொல்கிறார்.. ஒரு ஆசை.. – தான் டியூஷன் படித்த அக்காவை முத்தமிட வேண்டும் என்றும் அடுத்த ஆசை நிர்வாணமாக பைக் ஓட்ட வேண்டும் என்றும் சொல்கிறார் நல்லவேளை அப்படி ஒரு நிர்வாண காட்சியை வைக்கவில்லை..

Dear Radhi movie review