பைசன் காளமாடன் விமர்சனம் 4.25/5… சாதிய தீயில் கபடி வியர்வை  ஊற்றிய வலுவான பைசன்

பைசன் காளமாடன் விமர்சனம் 4.25/5… சாதிய தீயில் கபடி வியர்வை  ஊற்றிய வலுவான பைசன்

பைசன் காளமாடன் விமர்சனம் 4.25/5… சாதிய தீயில் கபடி வியர்வை  ஊற்றிய வலுவான பைசன்

 

சாதி வன்முறை அடிதடி வெட்டு குத்து கலவரங்களைக் கடந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் தமிழகத்தை தாண்டி இந்தியளவில் ஒரு விளையாட்டு வீரனாக எப்படி உயர்ந்தான்.. அவன் எப்படி அர்ஜுனா விருதை வென்றான் என்பது தான் ஒன்லைன்..

ஸ்டோரி…

அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட கதை இது..

1990 ஆம் ஆண்டுகளில் இந்த படத்தின் கதை தொடங்குகிறது.. ஜப்பானில் நடக்கும் கபடி விளையாட்டு போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதில் இந்திய அணி வீரர் துருவ் விக்ரம் கலந்து கொள்கிறார்.. அவர் எப்படி தென் மாவட்டத்தில் பல கலவரங்களை மீறி பல சாதி மோதல்களை தவிர்த்து இந்த இடத்திற்கு உயர்ந்தார்..

அதை நாயகனின் கண்ணோட்டத்தில் இருந்து திரைக்கதை காவியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்..

கேரக்டர்ஸ்…

துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், லால், அருவி மதன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர்..

நடிகர் விக்ரமுக்கு சேது, பிதாமகன், அந்நியன், ஐ உள்ளிட்ட படங்கள் இன்றும் பெயர் சொல்லும்.. அந்த வகையில் த்ருவுக்கு பைசன் படம் காலம் கடந்து நிற்கும்.. கிட்டான் கேரக்டரில் இளம் நெஞ்சங்களை கிள்ளி வைக்கிறார்.. பள்ளி மாணவனாக தன் தோற்றத்தை தன் தந்தையை போல் வருத்தி நடித்திருக்கிறார்..

வயது மூத்த பெண்ணுடன் காதல்… பெரிய ஜாம்பவான்களுடன் மோதல்.. அடிதடி கபடி ஆட்டம் என அனைத்திலும் துரு துரு இளைஞனாக ஜொலிக்கிறார் துருவ்..

கபடி போட்டி மட்டுமல்ல எங்களுக்கு நடிப்பிலும் போட்டி தான் என ஒவ்வொரு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்..

தந்தையாக பசுபதி.. தான் பட்ட கஷ்டங்கள் தன் மகன் மேல் விழக்கூடாது என்ற ஒவ்வொரு நிகழ்விலும் அவர் செய்யும் ஒவ்வொன்றும் தந்தை மீதான மரியாதையை உண்டாக்கும்.. அதிலும் முக்கியமாக போலீஸ்காரனை துருவ் அடித்து விட்டபோது பசுபதி கெஞ்சும் காட்சி கண்கலங்க வைக்கும்..

மாரிக்கு மலையாள நடிகைகள் தான் பிடிக்கும் போல.. இதில் அனுபமா பரமேஸ்வரன் & ரஜிஷா விஜயன் இரு நடிகைகளை அசல் கிராமத்து பெண்ணாகவே மாற்றி இருக்கிறார்.. ரஜீஷாவுக்கு குரல் கொடுத்த ரவீனாவின் குரலும் கிராமத்து வட்டார மொழியில் சிறப்பு…

அனுபமா அழகிலும் நடிப்பிலும் அசத்தல்.. கிராமத்து பெரிய மனிதராக லால்.. தன் நடிப்பிலும் உயர்ந்திருக்கிறார்..

வடசென்னையில் மிரட்டிய அமீர் இதில் பாண்டியராஜன் ஆக ஜொலிக்கிறார்.. இவரை தவிர யாரும் செய்திருக்க முடியாது என்பது போல மிரட்டி இருக்கிறார்.. புழுதி காட்டில் புரண்ட ஒருவன் உயர்ந்து நிற்கிறான்.. அவன் உனக்கு பிச்சைக்காரனா.? என அனுபமா அண்ணனை மிரட்டும் காட்சியில் அப்ளாஸ்களை அள்ளுவார் அமீர்..

வெறுமனை பிடி மாஸ்டர் என்று நினைத்தாலும் மதன் அந்த கேரக்டரில் ஒரு ஆசிரியராக உயர்ந்து நிற்கிறார்.. இது பல சிறந்த மாணவர்களுக்கு தங்களது ஆசானை நினைவுப்படுத்தும்..

(லால் கேரக்டர் வெங்கடேசன் பண்ணையாரையும் அமீர் கேரக்டர் பசுபதி பாண்டியன் நினைவுபடுத்தும்.) நடிகர் அமீருக்கு கதை சொல்லும் போது மாரி இதை சொன்னதாக அவரும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்..)

 

டெக்னீசியன்ஸ்…

இசை : நிவாஸ்.கே.பிரசன்னா
ஒளிப்பதிவு : எழில் அரசு

அப்ளாஸ் என்டர்டெயின்ட்மென்ட், நீலம் புரடக் ஷன்
இயக்கம் : மாரி செல்வராஜ்

இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போது அது நமக்கு பிடித்து விட்டால் யாருப்பா இந்த இசை.? என்று கேட்கும் அளவுக்கு ஒவ்வொரு அதிர்விலும் நம்மை வியக்க வைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா.. பாடல்களும் பின்னணி இசையும் பட்டையை கிளப்பும்.. ஒரு பக்கம் கபடி ஆட்டம்.. ஒரு பக்கம் சாமியாட்டம் அந்த காட்சியில் நிவாஸ் நம் மனங்களில் இசையால் நிறைகிறார்..

எழிலரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. கிராமத்திற்கே நம்மை கொண்டு சென்று காளமாடன் தரிசனம் கொடுத்திருக்கிறார்..

நட்சத்திர அந்தஸ்து நடிகர்களை மீறி தன் திரைக்கதையின் மேல் நம்பிக்கை வைத்த ஒரு இயக்குனரால் தான் இப்படி தொடர் வெற்றிகளை கொடுக்க முடியும்.. அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை மாமன்னன் எனத் தொடர்ந்து தற்போது பைசன் வரை தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருகிறார் மாரி செல்வராஜ்..

பல வசனங்கள் நம்மை அறியாமல் நம்மை கைதட்ட வைக்கும் அளவுக்கு ஒவ்வொரு வசனங்களிலும் அத்தனை நேர்த்தி..

துருவ் அனுபமா பிரியும் காட்சியில் இருவரும் முத்தமிட வேண்டும் என்று எதிர்பார்ப்பு நம்மில் எழுகிறது.. அப்படி ஒரு உணர்வுபூர்வமான காதலையும் கலந்து கொடுத்திருப்பது சிறப்பு..

சாதிய தீயில் கபடி உணர்வு கலந்து வலுவான பைசன்-ஐ கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்..

வழக்கம்போல புரட்சிகரமான படைப்புகளை இந்த படத்தின் மூலமும் மாரியின் மாறாத இயக்கத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் பா ரஞ்சித்..

 

Bison Kaalamadan movie review

—-