சுரேஷ் காமாட்சி பிடிவாதம்.; ‘வணங்கான்’ சூர்யா விலகியது ஏன்.? பாலா ஓபன் டாக்

சுரேஷ் காமாட்சி பிடிவாதம்.; ‘வணங்கான்’ சூர்யா விலகியது ஏன்.? பாலா ஓபன் டாக்

 

சுரேஷ் காமாட்சி பிடிவாதம்.; ‘வணங்கான்’ சூர்யா விலகியது ஏன்.? பாலா ஓபன் டாக்

 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’.

இந்த படம் அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.. இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குனர் பாலா தன்னுடைய சமீபத்திய பேட்டியில்… ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடித்த போது ஏன் படம் கைவிடப்பட்டது? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அந்த பேட்டியில்.. எனக்கும் சூர்யாவுக்கும் எந்த மன வருத்தமும் இல்லை.. திரையுலகில் எனக்குப் பிடித்தவர்களில் முதலிடத்தை பிடித்தவர் சூர்யா தான்.

‘வணங்கான்’ பட ஷூட்டிங்கை கன்னியாகுமரியில் நடத்தினோம்.. சூர்யாவை காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர்.. ஒரு நாள் கூட சூட்டிங் முழுமையாக நடத்த முடியவில்லை.. எனவே சூர்யா விலகினார்.. மத்தபடி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

மேலும் தன்னுடைய இயக்கத்தில் நடித்த விக்ரம் ஆர்யா விஷால் ஆகியோரை பற்றியும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஆரியா மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகர்.. எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக செய்யக் கூடியவர்.. தன் உடலில் மிகுந்த கவனம் கொண்டவர்.. ‘அவன் இவன்’ படத்தில் நடித்த போது விஷால் மாறுக்கண் நபராக நடித்தார்.. இன்று வரை அவர் ஒத்தை தலைவலியில் அவதிப்படுகிறார்.

விக்ரம் பற்றிய கேள்விக்கு சிறிது நேரம் யோசித்தார் பாலா.. “இந்த யோசனை தான் அதற்கான பதில்” என்று மட்டும் கூறினார்..

பாலா 25 என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என சொன்னேன்.. ஆனால் வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதை மறுத்து அந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் எனவும் தெரிவித்துள்ளார் பாலா..

Bala open talk about Suriya quit Vanangaan