ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்பேன்.. – கமல்.; தலைவர் 173 படத்தை இயக்கும் தனுஷ்.?

ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்பேன்.. – கமல்.; தலைவர் 173 படத்தை இயக்கும் தனுஷ்.?

 

 

ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்பேன்.. – கமல்.; தலைவர் 173 படத்தை இயக்கும் தனுஷ்.?

 

தலைவர் 173.. ஒரு சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது.. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே இந்த படத்தின் பேச்சு கோலிவுட் எங்கும் எதிரொலித்தது.

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடித்த சுந்தர் சி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு வாரம் கழித்து இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக இயக்குனர் சுந்தர் சி அறிவித்தார்.. இதனால் என்ன ஆச்சு.?:ஏதாச்சு.? என்று பலரும் பலவிதமாக பேசத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளர் கமல்ஹாசனிடம் இது பற்றி கேள்வி கேட்டபோது…

“சுந்தர் சி விலகியதற்கான காரணத்தை அவரே சொல்லிவிட்டார்.. என் நட்சத்திரம் (ரஜினிக்கு) கதை பிடிக்கும் தொடர்ந்து கதைகள் கேட்பேன். அதுவே ஆரோக்கியமானது.. புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்..

இந்த நிலையில் ரஜினி படத்தை நடிகர் தனுஷ் இயக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.. ஏற்கனவே பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் என்று சொல்லலாம். ராயன் படம் கமர்சியலாக மாஸாக இருந்தது.. இட்லி கடை உணர்வுபூர்வமாக அமைக்கப்பட்டு இருந்தது..

எனவே ரஜினி கதை மாஸாக இருக்குமா அல்லது உணர்வுப்பூர்வமாக மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்..

 

I will listen story for Rajini says Kamal.. Thalaivar 173 director Dhanush