தேசிய விருதுகளை வென்று.. 45+ வருடங்களுக்குப் பிறகு வந்த ‘நாயகன்’ எப்படி இருக்கிறார்.?
தேசிய விருதுகளை வென்று.. 45+ வருடங்களுக்குப் பிறகு வந்த ‘நாயகன்’ எப்படி இருக்கிறார்.?
தமிழ் சினிமா 75 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்றும் சில படங்கள் மட்டும் ரசிகர்களால் எப்போதும் எவர் க்ரீன் படங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது..
அதில் முக்கிய இடத்தைப் பிடித்த ஒரு திரைப்படம் தான் ‘நாயகன்’. 1987 ஆண்டில் இந்த படம் வெளியானது.
இந்த படத்தை மணிரத்னம் இயக்க இளையராஜா இசையமைக்க முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.. நாயகன் திரைப்படம் இளையராஜா இசையமைப்பில் உருவான 400 வது படமாகும்.. ( மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படம் இளையராஜாவின் 500 வது படம் என்பது கூடுதல் தகவல்.)
பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய தோட்டா தரணி கலைப்பணிகளை கவனித்திருந்தார்..

கமல்ஹாசன் 30 வயது 60 வயது என வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் நடிக்கும் போது கமலுக்கு 33 வயது தான்.. ஆனாலும் 60 வயது முதியவராக முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருந்தார்.. அவரது இந்த தோற்றமே ஏன் கமல்ஹாசன் காதல் இளவரசன் என்று அழைக்கப்பட்டார் என்பதை எடுத்துரைக்கும்..
இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும், ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அப்போது படம் தமிழ்நாட்டில் 200+ நாட்கள் ஓடியது..
1988 ஆம் ஆண்டில் மூன்று தேசிய விருதுகளை நாயகன் திரைப்படப் பெற்றது.. சிறந்த நடிகர் – கமல்ஹாசன்.. சிறந்த ஒளிப்பதிவாளர் – பிசி ஸ்ரீராம்.. சிறந்த கலை இயக்குனர் – தோட்டா தரணி
2025 நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை நவம்பர் ஆறாம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது..
கமல் மணிரத்னம் இளையராஜா ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் பார்த்துக் கொண்டாடும் படமாக இந்த படம் மாறி உள்ளதை திரையரங்குகளில் காண முடிகிறது..

இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற நான் சிரித்தால் தீபாவளி… தென்பாண்டி சீமையிலே.. நில அது வானத்து மேலே.. உள்ளிட்ட பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது..
ஒரு சாமானியன் எப்படி பாமர மக்களின் தலைவன் ஆகிறார். அவர்களை எப்படி நல்வழிப்படுத்துகிறான் என அழகாக கவித்துவமாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் மணிரத்னம் என்று சொன்னால் அது மிகை அல்ல..
ஆனால் வன்முறை எப்படி தன் குடும்பத்தை சீரழித்து நாளை அதுவே நமக்கு எதிரான கத்தியாக மாறும் என்பதையும் சமூக கருத்தாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
ரீரிலேசிலும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் உலகமெங்கும் 400 திரையரங்குகளில் இந்த படத்தை திரையிட்டுள்ளனர்… தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த படத்திற்கு பெருமளவில் புக்கிங் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொலைக்காட்சிகளில் நிறைய யூடியூபில் பார்த்திருந்தாலும் நிச்சயம் தியேட்டரில் கொண்டாடும் படமாக இந்த படம் இருப்பதால் அனைத்து தரப்பினரும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து மகிழலாம்..
Nayakan movie review and re release news

