உங்க உழைப்பும் உங்க ஆளுமையும் எப்பவும் ஆச்சரியப்படுத்தும்..; ‘பைசன்’ இயக்குனருக்கு ரஜினி பாராட்டு

உங்க உழைப்பும் உங்க ஆளுமையும் எப்பவும் ஆச்சரியப்படுத்தும்..; ‘பைசன்’ இயக்குனருக்கு ரஜினி பாராட்டு
‘பைசன்’ படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பைசன் படம் வெளியாகி பெறும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று பெரும் வெற்றிபடமாக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது..
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது பதிவில் இது பற்றி குறிப்பிட்டு பதிவுசெய்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்..
“சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்”
‘
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று தனது நன்றியை பதிவு செய்துள்ளார் மாரிசெல்வராஜ்.
Rajini appreciates Bison and Mari Selvaraj