4 நாட்களில் ₹ 83 கோடி.. 5 நாட்களில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘டியூட்’ பிரதீப்

4 நாட்களில் ₹ 83 கோடி.. 5 நாட்களில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘டியூட்’ பிரதீப்
பிரதீப் ரங்கநாதன் முதன்முறையாக இயக்கி ரவி மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோமாளி’.. இந்த படம் 100 கோடி வசூல் செய்தது.
இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனே நாயகனாகவும் அறிமுகம் ஆகி இயக்கி நடித்த திரைப்படம் ‘லவ் டுடே’.
இந்த படமும் ₹ 100 கோடியே வசூலித்தது.
இதன் பின்னர் இவரது நடிப்பில் உருவான டிராகன் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.. இந்த படமும் ₹ 100 கோடியை கடந்தது.. தற்போது Dude படம் ₹ 100 கோடியை நெருங்கி வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் நான்கு நாட்களில் ₹ 83+ கோடியை உலக அளவில் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும் ஐந்து நாட்களில் இந்த படம் ₹ 100 கோடியை எட்டி விடும் என தெரியவந்துள்ளது.
இதனால் நான்காவது முறையாகவும் ₹ 100 கோடியை கடந்து இருக்கிறார் நாயகன் பிரதீப் நங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது..
கீர்த்திஸ்வரன் இயக்கிய டியூட் திரைப்படத்தில் மமீதாபைஜூ நாயகியாக நடித்த சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்..
Pradeep starrer Dude movie collection ₹100cr in 5 days
—