விருது கிடைத்தால் குப்பையில் போடுவேன்..; அதுக்கு வாங்காம இருக்கலாமே விஷால்.!?

விருது கிடைத்தால் குப்பையில் போடுவேன்..; அதுக்கு வாங்காம இருக்கலாமே விஷால்.!?

விருது கிடைத்தால் குப்பையில் போடுவேன்..; அதுக்கு வாங்காம இருக்கலாமே விஷால்.!?

 

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷால்.. இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்துள்ளார்..

மேலும் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.. தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பதவி வகித்தவர் விஷால்..

தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் மகுடம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

மேலும் தேவி அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பல சமூக சேவைகளும் செய்து வருகிறார்.. இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேசிய பேச்சு சர்ச்சை ஆகியிருக்கிறது..

“எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. 4 பேர் 7 கோடி பேருக்கு பிடித்த படம் எது.? சிறந்த நடிகர், சிறந்த நடிகை யார்..? என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?

எனக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதால், இதை சொல்லவில்லை.. அப்படி எனக்கு விருதுகள் கொடுத்தால், குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன்..”

இவ்வாறு விஷால் தெரிவித்தார்..

(விருது வாங்கி ஏன் குப்பைத் தொட்டில் வீசவேண்டும் விஷால்.? அதற்கு பதிலாக நீங்கள் வாங்காமல் மறுத்து விடலாமே.?)

Right News Raja

——-

I hate awards i will through it in dustbin says Vishal