மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்… பாடி பில்டர் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.!

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்… பாடி பில்டர் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.!

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்… பாடி பில்டர் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.!

 

மிமிக்ரி… பாடி பில்டிங் உள்ளிட்ட பல பன்முக திறமை கொண்டவர் நடிகர் ரோபோ சங்கர்.. இவர் சின்ன திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளை செய்து ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.. தொடர்ந்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தது..

ஜெயம் ரவி பாவனா நடித்த தீபாவளி என்ற படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.. அதன் பின்னர் தனுஷ் உடன் ‘மாரி’ & விஷாலுடன் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களின் நடித்தார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் இவரது காமெடி கேரக்டர் ஜாக்கெட் ஜானகிராமன் என்பது படு பிரபலம்..

நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார்… ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் இளைத்து ஒல்லியாக காணப்பட்டார்..

குடிப்பழக்கமே அவரது உயிருக்கு கெடுதலாய் அமைந்தது.. பின்னர் குடிப்பதை குறைத்து வந்தாலும் முழுமையாக குடிப்பழக்கத்தில் இருந்து அவர் மீளவில்லை என்று கூறப்படுகிறது..

உடல் நலம் தேறி குணமாகி மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வந்தார்..

ஓரிரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பல சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்..

இந்த நிலையை திடீர்னு அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானது.. இதனை எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார.. அதன்படி இன்று செப்டம்பர் 18ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.. இவருக்கு தற்போது 46 வயதாகிறது..

செப்டம்பர் 20ஆம் தேதி மதுரையில் இவரது பேரன் நட்சத்திரன் குழந்தையின் காதணி விழா நடைபெற உள்ளது.. அந்த குழந்தைக்கு கமல்ஹாசன் தான் பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் இவர் கமலின் தீவிர ரசிகர் என்பதும் கமல்ஹாசனை ஆண்டவர் என்று இவர் அழைப்பதும் வழக்கம்.. கமலஹாசன் பிறந்தநாள் விழாக்களில் இவரது போஸ்டர்கள் சென்னை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Actor Robo Sankar passed away at age 46.