செப்டம்பர் 12 திரையரங்குகளில் BOMB போடும் ‘அதிரும் குரலோன்’ அர்ஜுன் தாஸ்
செப்டம்பர் 12 திரையரங்குகளில் BOMB போடும் ‘அதிரும் குரலோன்’ அர்ஜுன் தாஸ்
பெண்களின் குரல் இனிமை என்றால் ஆண்களின் குரல் கம்பீரம்… ஆண்களில் ஒரு சிலருக்கே இந்த கம்பீரம் கனகச்சிதமாக பொருந்தி இருக்கும்..
அந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் நடிகர்
அர்ஜுன் தாஸ்.
தமிழ் ரசிகர்களுக்கு இவர் வில்லனாகத்தான் அடையாளப்படுத்தப்பட்டார். இவரது குரல் எங்கு இருந்தாலும் நம்மை திரும்பி பார்க்க வைக்கும்.. கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் கூட்டத்தில் ஒருவராக இவர் நின்றாலும் தனித்து காணப்பட்டார்.
இதனை எடுத்து இவருக்கு கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தன.. அநீதி & ரசவாதி உள்ளிட்ட படங்களில் நாயகனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அர்ஜுன் தாஸ்..

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அஜித்தின் குட் பேட் அக்னி படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்..
தற்போது BOMB பாம் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். இதனை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்..
இதில், அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்க இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க இப்படம் வருகிற செப்டம்பர் 12ந் தேதி வெளியாகவுள்ளது..
திரையரங்குகளில் அர்ஜுன் தாஸ் போடும் பாம் படத்தைக் காண ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்..
அவர்களுடன் இணைந்து நாங்களும் காத்திருக்கிறோம்…
Arjun doss starring Bomb movie exclusive news

