விஷால் – தன்ஷிகா ஜோடிக்கு நிச்சயிக்கப்பட்ட திருமண தேதியில் நிச்சயதார்த்தம் நடந்தது.!
விஷால் – தன்ஷிகா ஜோடிக்கு நிச்சயிக்கப்பட்ட திருமண தேதியில் நிச்சயதார்த்தம் நடந்தது.!
கடந்த மே மாதம் 3ஆம் வாரத்தில் நடைபெற்ற ‘யோகி டா’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தங்கள் காதலை அறிவித்தனர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா.
அப்போது அவர்கள் மேடையில் பேசும்போது.. தாங்கள் இருவரும் மனதார காதலிப்பதாகவும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷால் பிறந்தநாளில் தங்கள் திருமண நடைபெறும் எனவும் அறிவித்தனர்.
மேலும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடமும் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடிகர் விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தற்போது வயது 48 ஆகிறது.. தன்ஷிகாவுக்கு 35 வயது ஆகிறது..

இவர்கள் அறிவித்தபடி இன்று திருமணம் நடைபெறவில்லை.. மாறாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது..
விரைவில் திருமணம் நடைபெறும் என்று விஷால் மற்றும் சாய் தன்ஷிகா அறிவித்துள்ளனர்..
Vishal and Sai Dhanshika got engaged on Actors Birthday

