‘கூலி’ விமர்சனம் 3.75/5… ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தினாரா கமல் ரசிகர் லோகேஷ்.?

‘கூலி’ விமர்சனம்… ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தினாரா கமல் ரசிகர் லோகேஷ்.?
ஸ்டோரி…
தேவா என்ற பெயரில் மேன்ஷன் நடத்தி வருகிறார் ரஜினி.. அப்போது இவரது நண்பர் சத்யராஜ் இறந்துவிட்டதாக தகவல் வரவே அங்கு செல்கிறார்.. அங்கு ரஜினியின் வருகை பிடிக்காத சத்யராஜ் மகள் ஸ்ருதிஹாசன் இவரை விரட்டுகிறார்.
அவர் மாரடைப்பில் இருந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவரது மரண அறிக்கையில் அவர் நெஞ்சில் கடுமையாக தாக்கப்பட்டதாக விவரம் இருப்பதை அறிகிறார் ரஜினி..
இவரது மரணத்திற்கும் சமூக விரோத செயல்களை செய்யும் நாகர்ஜூனா & சௌபின் குழுவிற்கும் தொடர்பு இருப்பதாக ரஜினி அறியவே அங்கு செல்கிறார்..
அதன் பிறகு அங்கு என்ன நடந்தது தன் நண்பரை கொன்றவரை அறிந்து கொண்டாரா ரஜினி.? சட்ட விரோத செயல்களை செய்யும் நாகர்ஜுனா டீம் சத்யராஜை கொல்ல என்ன காரணம்.? பின்னணியில் நடந்தது என்ன.? என்பதுதான் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாகிர், சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான், சார்லி மற்றும் பலர்
தன்னை நம்பி தான் இந்தக் கூலி படம் என்பதை உணர்ந்த ரஜினி தன் ஒட்டு மொத்த உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.. கிராபிக்ஸில் DI Ageing செய்யப்பட்ட பிளாஷ்பேக் ரஜினி தூள்.. அந்த பீடி பிடிக்கும் ஸ்டைலும் மாஸ்..
மலையாள நடிகர் சௌபின் ஷாகிர் பட்டையை கிளப்பி இருக்கிறார்.. இவரது கேரக்டர் சரவெடி.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து சேட்டன் சேட்டை செய்திருக்கிறார்..
பெரும்பாலும் கிளாமர் வேடங்களில் நாம் கண்டு ஸ்ருதிஹாசன் இதில் குடும்பப் பாங்கான கேரக்டரில் கலங்க வைக்கும் நடிப்பை கொடுத்துள்ளார்..
ஸ்டைலிஷ் லுக்கில் நாகார்ஜுனா மிரட்டி இருக்கிறார்.. ஆனால் ஹீரோவை மிரட்டும் வில்லனாக மாஸ் காட்டி இருக்கலாம்..
ரஜினி நண்பராக சத்யராஜ்.. இவரைச் சுற்றி கதை இருந்தாலும் இவரது காட்சி குறைவு..
கன்னட ஹீரோ உபேந்திரா.. கௌரவத் தோற்ற உபயம் என சொல்லலாம்.. மெயின் வில்லன் அமீர்கான்.. ஆனால் ரஜினிக்கும் அவருக்கு மோதல் இல்லாமல் நட்பாக சீன்களை நகர்த்தி கூலி 2ம் பாகத்திற்கு விதை போட்டு இருக்கிறார் லோகேஷ்.
மோனிகா பாடலுக்கு ஆட்டம் போட்டு சீரியசான படத்தில் சில்லென்ற வைத்துவிட்டார் ரெட் ஆப்பிள் பூஜா ஹெக்டே..
சார்லி & காளி வெங்கட் ஆகியோரது கேரக்டர்களில் வலுவில்லை..
நாகார்ஜூனா மகனாக கண்ணா ரவி கவனிக்க வைக்கிறார்.. இவரின் காதலியாக ரச்சிதாராம்.. கொஞ்ச சாந்தம் கொஞ்சம் சரவெடி என மிரள வைக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
இயக்குநர் – லோகேஷ் கனகராஜ்,
இசை : அனிருத்,
ஒளிப்பதிவு : கிரிஷ் கங்காதரன்,
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
பிளாஷ்பேக் காட்சிகளில் ஆர்ட் டைரக்டர் சதீஷ் பணிகள் அருமை… 1980ல் நாம் ரசித்த ரஜினி படங்களை கண்முன் நிறுத்தி இருக்கிறார்..
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்.. பல்வேறு கேமரா கோணங்களில் அசத்தியிருக்கிறார்..
அன்பறிவு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.. ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது..
அனிருத் இசையில் சிக்கிட்டு… மோனிகா மோனிக… அரங்கம் அதிரட்டுமே ஆகிய பாடல்கள் தாளத்துடன் ரசிகர்களை ஆட்டம் போடவும் வைக்கிறது..
விடை தெரியாத கேள்விகள்.??
இறந்தவர்களை எரித்து சாம்பலாக்கும் அதிநவீன ஒரு சேரை கண்டுபிடிக்கிறார் சத்யராஜ்.. அதில் மிருகங்களை எரிப்பதற்காகவே அவர் கண்டுபிடித்ததாக சொன்னாலும் அதை ஒரு நாற்காலி வடிவில் அவர் கண்டுபிடித்தது ஏன்.? நாற்காலியில் அமரப் போவது மிருகமா என்ற கேள்விக்கு விடை இல்லை.?
அதுமட்டுமில்லாமல் இப்பொழுது மின்தகனம் சாம்பல் மிஷின் இருக்கும் சூழ்நிலையில் வில்லன் குழுவினர் ஏன் விஞ்ஞானி சத்யராஜை அணுக வேண்டும்.?
ரஜினியின் மகள் விவரம் ரஜினிக்கே தெரியாதா.? அதை மறைக்க 30 வருடங்கள் ஏன்.?
தான் ஒரு கமல் ரசிகர் என்பதால் ரஜினி ரசிகர்களை மறந்து காட்சிகளை அமைத்திருக்கிறாரோ லோகேஷ்? ரஜினிக்கு எந்தவிதமான ஸ்டைலிஷ் பில்டப் அறிமுக காட்சியும் இல்லை.. ரஜினிக்கு ஜோடி இல்லை டூயட் இல்லை.. காமெடி, பன்ச் டயலாக், குழந்தைகள் & பெண்களை கவரும் சீன்கள்.. கூலிங் கிளாஸ் இல்லை.. இப்படியாக ரஜினி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் லோகேஷ்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினியை ரஜினியாக தான் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் லோகேஷ்.. ஆனால்.?
தங்க கடத்தல், காஸ்ட்லி வாட்ச் என டிரைலரில் காண்பிக்கப்பட்டது… அந்த எதிர்பார்ப்புடன் வந்தால் அவை யாவும் இல்லை.. மாறாக மனித இதயத்தை கடத்தும் தொழிலே கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது..
கூலி படத்திற்கு சென்சாரில் A சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் வன்முறை பெரியளவில் தெறிக்கவில்லை.. இந்த படத்திற்கு ஏன் A சர்டிபிகேட் என்று கேள்வியும் எழுகிறது..
Rajini in Coolie movie review
கூடுதல் தகவல்…:
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம்,
‘கூலி’. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன.
1.நெற்றிக்கண் (1981) – ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் தந்தை, மகனாக நடித்த படம் இது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், விசு வசனம் எழுத, கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுதி இருந்தார். தந்தை மற்றும் மகனுக்கு இடையில் நடக்கும் மோதல் தான் படத்தின் கதை.
2.புதுக்கவிதை (1982) – இது கன்னட படத்தின் ரீமேக். ரொமான்டிக் டிராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ‘வெள்ளை புறா ஒன்று’ பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசை அமைத்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் படத்தை இயக்கி இருந்தார்.
3.நான் மகான் அல்ல (1984) – எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் நான் மகான் அல்ல. இதில் விஸ்வநாத் என்ற பெயரில் வழக்கறிஞராக ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
4.நான் சிகப்பு மனிதன் (1985) – எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இதில் ‘விஜய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இது இந்தி படத்தின்
ரீமேக்.
5.சிவா (1989) – ரஜினிகாந்த், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த படம் சிவா. ஆக்ஷன் டிராமாவாக வெளியாகி இருந்தது. இந்தப் படம் இந்தி படத்தின் ரீமேக்…
List of Rajinikanths A certificate movies
–