சினிமா வெற்றியை தாண்டி ‘அகரம்’ தந்த மகிழ்ச்சி.. – ‘விதை’ 15-வது ஆண்டு விழாவில் சூர்யா வியப்பு
சினிமா வெற்றியை தாண்டி ‘அகரம்’ தந்த மகிழ்ச்சி.. – ‘விதை’ 15-வது ஆண்டு விழாவில் சூர்யா வியப்பு
சினிமாவை தாண்டி அகரம் என்ற அமைப்பின் மூலம் பல ஏழை மாணவர்களை படிக்க வைத்து சமூக சேவை ஆற்றி வருகிறார் நடிகர் சூர்யா.
அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது..
இந்த விழாவில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி மற்றும் திரைப்பட நடிகர் பாராளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
மேலும் அகர பவுண்டேஷன் மாணவர்களுக்காக ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் ₹ 50 லட்சம் நன்கொடை அளித்தார்..

இந்த விழாவில் சூர்யா பேசியதாவது…
வணக்கம்… கொடுக்க கொடுக்க குறையாதது கல்வி. அதே போல கொடுக்க கொடுக்க குறையாதது அன்பு என்பதை இங்கே இருப்பவர்களும் நன்கொடையாளர்களும் நிரூபித்து வருகிறார்கள்.
நான் 2010-ம் ஆண்டு அமெரிக்கா சென்றேன். அப்போது இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் என்னிடம் பேச வந்தார். ‘அண்ணா நான் அகரம் விதை திட்டத்தில் படித்தவன்.. நான் 2010 பேட்ச். என் பெயர் யோகி’என்றார்.
நான் ஆச்சரியமாக பார்த்தேன். எனக்கு அவரை அடையாளம் தெரியல.. சரி வாங்க யோகி, உங்களை நான் டிராப் செய்கிறேன் என்று சொன்னேன்.
இல்லை வேண்டாம்.. எனக்காக லிமோசின் கார் வெயிட் பண்ணுது. அதில் சென்றுவிடுவேன் என்றார். ஆக அது தான் அகரம் கொடுத்த மாற்றம்..
அவர் அன்று சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சினிமா வெற்றிகள் தாண்டி அந்த சந்தோஷம் வேறு மாதிரி இருந்தது.. ”
இவ்வாறு சூர்யா நெகிழ்ச்சியாக பேசினார்.
Agaram Student surprise to Actor Suriya

