ஒண்ணுமே ரிலீஸ் ஆகல.. ஆனாலும் 8 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர் யார்.?

ஒண்ணுமே ரிலீஸ் ஆகல.. ஆனாலும் 8 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர் யார்.?

ஒண்ணுமே ரிலீஸ் ஆகல.. ஆனாலும் 8 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர் யார்.?

 

தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசை அமைப்பாளர்களில் ஒருவர் சாய் அபயங்கர்.. ஆனால் இப்படி முழுமையாக சொல்ல முடியாது.. காரணம் இவர் இசையில் ஒரு படம் கூட வெளியாகவில்லை.. ஆனாலும் இதுவரை எட்டு படங்களில் இவர் கமிட்டாகி இருக்கிறார்.. இவரை இசையில் பல படங்கள் உருவாகி வருகிறது..

 

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’, அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் படம், சிவகார்த்திகேயன் – விநாயக் இணையும் படம், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள DUDE ‘டூயூட்’, ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘பென்ஸ்’, ஷான் நிகாம் நடித்துள்ள ‘பல்டி’, சிம்பு நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 49’, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்..

பொதுவாக ஒரு படத்தின் பாடல்கள் ஹிட் ஆனால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் இசையமைப்பாளருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்..

 

இந்த சூழ்நிலையில்
இவர் இசையமைத்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் இவரது கைவசம் எப்படி எட்டு படங்கள் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருக்கிறது..

இவர் பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.. அப்போ இவருக்கு வாய்ப்பு வந்தா..??

Who is Music Director Sai Abhayankar.?

 

 

 

Related articles