சொந்த வீட்டில் பிறந்து இப்போ வாடகை வீட்டில் இருக்கேன்..; 3BHK விழாவில் ரவி மோகன் பேச்சு

சொந்த வீட்டில் பிறந்து இப்போ வாடகை வீட்டில் இருக்கேன்..; 3BHK விழாவில் ரவி மோகன் பேச்சு

சொந்த வீட்டில் பிறந்து இப்போ வாடகை வீட்டில் இருக்கேன்..; 3BHK விழாவில் ரவி மோகன் பேச்சு

 

எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 3BHK

இதில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்..

சென்னையில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இப்படம்.

ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது..

இந்த விழாவில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவிமோகன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், ‘கொட்டுக்காளி’ வினோத்ராஜ், ‘அயலான்’ ரவிக்குமார், ‘அயலி’ முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன் பேசும்போது…

இந்தப் படம் 3BHK சொந்த வீடு இல்லாதது பத்தி பேசுற ஒரு படம்… நான் சொந்தவீட்டிலதான் பிறந்தேன், வளர்ந்தேன். ஆனால், இப்போ வாடகை வீட்டில் இருக்கேன்..

அதனால இந்தப் படத்தோட உணர்வுப்பூர்வமாக என்னை தொடர்புப்படுத்திக்க முடிஞ்சது. இனி புத்துயிர்போட வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன்” என்று பேசினார் நடிகர் ரவி மோகன்..

 

Actor Ravi Mohan speech at 3BHK Trailer launch

 

 

—-