‘குபேரா’ ட்ரெய்லர் 10M சாதனை.. இது நடிகர்களின் படமல்ல என நாகர்ஜுனா பேச்சு
‘குபேரா’ ட்ரெய்லர் 10M சாதனை.. இது நடிகர்களின் படமல்ல என நாகர்ஜுனா பேச்சு
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் & நாகார்ஜூனா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குபேரா’.. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் வருகிற ஜூன் 20 வெளியாகிறது
நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார்.

இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
குபேரா ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் நாகார்ஜுனா பேசும்போது.. இது என்னுடைய படமோ தனுஷின் படமோ ராஷ்மிகாவின் படமோ அல்ல.. இது டைரக்டர் சேகர் கம்முலாவின் படமாக இருக்கும் என தெரிவித்தார்..
குபேரா படத்திற்கு சென்சாரில் UA சான்றிதழ் கிடைத்துள்ளது.. ஆனால் படத்தின் நீளம் 3 மணி நேரம் 14 நிமிடத்தை கடந்துள்ள நிலையில் மீண்டும் அதற்கு எடிட்டிங் செய்து தற்போது மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது..
எனவே மீண்டும் படத்தைத் தயாரிப்பு நிறுவனம் சென்சார் செய்துள்ளனர்.
Dhanushs Kuberaa Trailer makes record
—

