IMMORTAL பிரதீப் – அதர்வா – சிம்புவை தொடர்ந்து GV பிரகாஷுடன் இணைந்த கயாது லோஹர்
IMMORTAL பிரதீப் – அதர்வா – சிம்புவை தொடர்ந்து GV பிரகாஷுடன் இணைந்த கயாது லோஹர்
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களாலும் இளம் ஹீரோக்களாலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர் கையாடு லோகர்.. எனவே தங்களது படங்களில் இவரை கமிட்டாக வேண்டும் என்று ஹீரோக்கள் ஒரு புறம் அடம்பிடித்து வருகின்றனர்..
அதன்படி ‘டிராகன்’ படத்தில் பிரதீப் உடன் இணைந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் அடுத்ததாக அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் சிம்பு & சந்தானம் இணையும் STR49 படத்தில் நாயகியாக கையாடு லோகர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்..

மேலும் ஜிவி பிரகாஷ்க்கு கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்குகிறார். இசையை சாம் சி.எஸ் மேற்கொள்ள அருண்குமார் தனசேகரன் படத்தை தயாரிக்கிறார்..
இப்படம் ஒரு மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு IMMORTAL இம்மோரடல் என்று தலைப்பிட்டு டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
Gv Prakash and Kayadu Lohar starring movie titled as Immortal

