எவ்ளோ அடிச்சாலும் சூரி தாங்குவாப்ல.. – வெற்றிமாறன்.; பணம் போதும்.. நல்ல படம் வேணும்.. – சூரி

எவ்ளோ அடிச்சாலும் சூரி தாங்குவாப்ல.. – வெற்றிமாறன்.; பணம் போதும்.. நல்ல படம் வேணும்.. – சூரி

எவ்ளோ அடிச்சாலும் சூரி தாங்குவாப்ல.. – வெற்றிமாறன்.; பணம் போதும்.. நல்ல படம் வேணும்.. – சூரி

 

 

ஜிவி. பிரகாஷ் நடித்த ‘செல்ஃபி’ படத்தை இயக்கியவர் மதிமாறன் புகழேந்தி.. இவரின் இயக்கத்தில் சூரி நடித்துள்ள புதிய திரைப்படம் `மண்டாடி’..

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தைத் தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடைமண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பங்களிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதன் டைட்டில் வெளியிடப்பட்டு படத்திற்கான அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

சூரி பேசும்போது…

இயக்குனர் சுசீந்திரன் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். பல படங்களில் நடித்தேன்.

அதற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் என் மீது வைத்த நம்பிக்கையில், அவர் கொடுத்த வாய்ப்பில் இப்போது கதை நாயகனாக மாறியிருக்கிறேன்.

என் வாழ்க்கையில் முதலில் பெயின்டராக இருந்தேன்.. இப்போது நடிகராக மாறி விட்டேன்.. இதுவரைக்கு என் தகுதிக்கு மீறி நல்லா சம்பாரித்து விட்டேன்.

இனி பணம் போதும்.. இனி எனக்குப் பிடிச்ச மாதிரி, நல்ல நல்ல கதையுடன் படங்கள் செய்தால் போதும்.

கலைத்தாய் எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்த என்னை நல்லா வச்சிருந்தாலே போதும்.” இவ்வாறு நெகிழ்ச்சியாக பேசினார் சூரி..

வெற்றிமாறன் பேசும்போது… சூரி அர்ப்பணிப்பு உள்ள நடிகர்.. அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டே நடிப்பார்” என பெருமையாக பேசினார்..

 

Soori emotional speech at Mandaadi title launch