விஜய்சேதுபதி – ருக்மிணி இணைந்த ACE படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

விஜய்சேதுபதி – ருக்மிணி இணைந்த ACE படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

விஜய்சேதுபதி – ருக்மிணி இணைந்த ACE படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

 

விஜய்சேதுபதி தற்போது ACE ஏஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இதில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்..

இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

 

படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது..

 

இந்நிலையில் ACE திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கி பின் சீட்டுக்கட்டு டிசைன் இடம் பெற்றுள்ளது.

 

Vijaysethupathis ACE movie release date is here