டைம் ட்ராவெல் பீலிங்..; விஜய் நடிச்சிட்டே இருக்கனும்.. ’சச்சின்’ ரீ-ரீலீஸில் மிஷ்கின் பேச்சு
டைம் ட்ராவெல் பீலிங்..; விஜய் நடிச்சிட்டே இருக்கனும்.. ’சச்சின்’ ரீ-ரீலீஸில் மிஷ்கின் பேச்சு
ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், சந்தானம் நடிப்பில் உருவான படம் ’சச்சின்’.. இப்படத்தின் 20 ஆண்டுகள் நிறைவையொட்டி ஏப்ரல் 18ல் இப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று ஏப்ரல் 17 சென்னை சத்யம் அரங்கில் பிரஸ் ஷோ திரையிடப்பட்டது.. இதில் தாணு & சிறப்பு விருந்தினர் மிஸ்கின் ஆகியோர் கலந்துக் கொண்டனர்..
ஸ்பெஷல் காட்சி முடிந்த பின் மிஷ்கின் பேசியதாவது…
விஜய் நடித்த ‘யூத்’ படத்தில் நான் ஒர்க் பண்ணி இருக்கேன்.. அப்போது பார்த்த விஜய் தான் ‘சச்சின்’ படத்தில் பார்த்தேன்.. ரொம்ப ஹாப்பி.. டைம் ட்ராவெல் செய்து காலேஜ் நாட்களுக்கு போனது போல் இருந்துச்சி..
என் படங்கள் எப்பவும் சீரியஸ் இருக்கும்.. எனக்கு சச்சின் போல ஜாலி படங்கள் எடுக்க தெரியாது..
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை எப்போதும் பார்க்கலாம்.. அதுபோல விஜய் படங்களும்.. அவர் அரசியலுக்கு சென்று விட்டார்.. ஆனாலும் அவர் வருடத்திற்க்கு ஒரு படமாவது விஜய் நடிக்கணும்..” இவ்வாறு மிஸ்கின் பேசினார்..
Director Mysskin open talk about Vijay and Sachein


