மக்களுக்காகவும் கால்நடைக்காகவும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் மகத்தான பணி

மக்களுக்காகவும் கால்நடைக்காகவும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் மகத்தான பணி

 

 

மக்களுக்காகவும் கால்நடைக்காகவும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் மகத்தான பணி

 

மக்கள் நல இயக்கத்தின் அன்பிற்கிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் செயல்படுவோம்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

பிறக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நிறைந்த வளம், வளர்ச்சி, ஆரோக்கியம், சந்தோஷம் அனைத்தும் கிடைத்திட இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எந்த அரசியல் ஆதாயம் எதிர்பார்ப்பும் இன்றி எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் நல இயக்கத்தின் அன்பிற்கினிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்,

புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க மக்கள் நல இயக்கத்தின் சார்பில் *”டாக்டர் அண்ணல் அம்பேத்கர்” அவர்களின் பிறந்த நாளில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தல்.*

பொது மக்களின் தாகம்
தீர்க்க கோடைகால தண்ணீர் பந்தல்

“மக்கள் பணியே மகத்தான பணி” என்னும் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் மக்களின் தாகத்தினை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்குவது நம்முடைய வழக்கம்..

இந்த ஆண்டும் அதே போன்று கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி விட்ட நிலையில் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உங்கள் பகுதியில் எவருக்கும் இடையூறு இன்றி உரிய அனுமதி பெற்று ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கிடவும்..

கால்நடைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்..

கோடை வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போல் கால்நடைகளையும் அதிகமாகப் பாதிக்கப்படுவது வழக்கம். அவற்றை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் தண்ணீர் குவளைகள் அமைத்து, கால்நடைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்..

அன்பை விதைப்போம்..
மனிதநேயம் காப்போம்..

அன்புடன்…

V ஹரிகிருஷ்ணன்
செயலாளர், மக்கள் நல இயக்கம்.
Ex. தலைவர் மேற்கு மாம்பலம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம்.

Actor Vishal Makkal nala Iyakkam news updates